வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ!
சென்னை: நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் மக்களிடையே பெரும் வரபே
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் மக்களிடையே பெரும் வரபேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நல்ல வசூலையும் குவித்துள்ளது நேர் கொண்ட பார்வை படம். இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

வரும் 29ஆம் தேதி
நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து அஜித்தின் 60-வது படத்திலும் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கும் என என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பைக் ரேஸர்
இந்தப் படத்தில் நடிகர் அஜித் பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார்.
தீயாய் பரவும் போட்டோ
இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் தனது 60வது படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ஃபுல் ஆக்ஷன் மூவி
இதனை பார்த்து பூரித்து போயுள்ள அஜித்தின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். தல 60 ஃபுல் ஆக்ஷன் மூவி வெய்ட்டிங் தல என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
ஏகே60 லோடிங்
அஜித்குமார் மீண்டும் உடல் எடையை குறைக்கிறார். ஏகே60 லோடிங் என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











