தல61 படத்தை ஏ எல் விஜய் இயக்குகிறாரா? இணையத்தில் கசியும் தகவல்!
சென்னை : அஜித்தின் 61வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக கசிந்து வருகிறது.
நடிகர் அஜித் இப்பொழுது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு உள்ளார்.
விஸ்வாசம்,நேர்கொண்டபார்வை என இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலை குவித்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

தமிழில் ரீமேக்
நடிகராக மட்டுமல்லாமல் தலைசிறந்த மனிதராகவும் விளங்கிவரும் நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வந்தது போக இப்பொழுது வினோத் இயக்கத்தில் அதே பாணியில் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் நேர்கொண்டபார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது.

விண்ணைத்தொட்டது
சதுரங்க வேட்டை படத்திலேயே ரசிகர்களிடம் நன் மதிப்பை பெற்ற இயக்குனர் வினோத் இரண்டாவது படத்திலேயே தல அஜித்துடன் இணைய எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டது படமும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் வலிமை படத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருக்க கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் ஏ.எல் விஜய்
விறு விறு வேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் இதுவரை ஒரு துளி கூட அப்டேட்டை கூட கசிய விடாமல் ரகசியமாக படக்குழு காத்து வருகிறது. 60வது படமாக வலிமை உருவாகிவர 61வது படத்தை யார் இயக்குவார் என பலரும் யோசித்துக் கொண்டிருக்கையில் அதில் இப்பொழுது இயக்குனர் ஏ.எல் விஜய்யின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.எல் விஜய் சமீபத்தில் அஜித்தை நேரடியாக சந்தித்து கதை ஒன்றை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போனதால், அஜித் 61 வது படமாக இது இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வரும் என நம்பப்படுகிறது. ஏ. எல். விஜய் மற்றும் அஜீத் ஏற்கனவே 2007 இல் வெளியான கிரீடம் படத்தில் பணியாற்றி இருந்தனர்.

விரைவில் ரிலீசாக
இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைகிறார்கள் என்ற செய்திகள் சமூக வளைதளத்தில் உலாவுகிறது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார் இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











