அஜித்தின் அடுத்தப்படம்... தயாரிப்பாளர், டைரக்டர் யார் தெரியுமா... வெளியான தகவல்

சென்னை : நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர். இயக்கி வருகிறார் எச் வினோத்.

இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும் சில காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிங்க் படத்தின் ரீமேக்

பிங்க் படத்தின் ரீமேக்

நடிகர் அஜித் எச் வினோத் இயக்கம் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படம் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதே கூட்டணியில் படம்

அதே கூட்டணியில் படம்

இந்நிலையில் எச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துள்ளது. ஒரு சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தற்போது படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.

Recommended Video

எல்லா ANIMALS கூடையும் என்னால பேச முடியும் | Actor Kaka Gopal chat part-01 | Filmibeat Tamil
அதிக செலவு

அதிக செலவு

தொடர்ந்து படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதால் தயாரிப்புத்தரப்பில் அதிகமான செலவை இழுத்து விட்டுள்ளதாகவும், அதனால் எஞ்சியுள்ள காட்சிகளை இந்தியாவிலேயே எடுத்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்ய அஜித் அடுத்த படத்தையும் அவருக்காக நடித்துக் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாவது படத்தில் அதே கூட்டணி

மூன்றாவது படத்தில் அதே கூட்டணி

மேலும் எச் வினோத்தே இந்த படத்தையும் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், எச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் அஜித் இணையும் மூன்றாவது படமாக அது இருக்கும். வலிமை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X