விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அதிக வசூலை ஈட்டியுள்ள அஜித்தின் துணிவு படம்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பேங்க் கொள்ளையை மையமாக வைத்து த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் அஜித் ரசிகர்களை அதிகமாக உற்சாகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனிலும் துணிவு படம் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது.

அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இந்தப் படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, திரையரங்குகளில் ரிலீசானது.

விஜய் -அஜித் படங்கள் மோதல்
விஜய்யின் வாரிசு படத்துடன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு துணிவு படம் நேரிடையாக மோதிய நிலையில், இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் சிறப்பான ஆதரவை அளித்தனர். வலிமை படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து துணிவு படம் சிறப்பான கதைக்களத்துடன் ரிலீசாகியுள்ள நிலையில், இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான கலெக்ஷன்ஸ்
துணிவு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்த நிலையில், படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனிடையே படம் வரும் 8ம் தேதி ஓடிடியிலும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபிசில் அஜித்தின் இந்தப் படம் சிறப்பான கலெக்ஷனை குவித்துள்ளது.

அதிகம் வசூலித்த 2வது படம்
இதனிடையே அஜித்தின் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்ற பெருமையையும் துணிவு படம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தப்படத்தின் கலெக்ஷன் 250 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது துணிவு படம்.

அஜித்தின் ஏகே62 படம்
கதைக்கும் தன்னுடைய கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அஜித். அடுத்ததாக அவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தன்னுடைய ஏகே62 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விரைவில் ஏகே62 படம் அறிவிப்பு
விரைவில் அறிவிப்பு வெளியாகி சூட்டிங் துவங்கவுள்ள அஜித்தின் ஏகே62 படத்தின் சூட்டிங்கை துரிதப்படுத்தி தீபாவளிக்குள் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











