விஜய்யை பின்பற்றும் அஜித்.. வாரிசு போலவே துணிவு படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாக இருக்கு!

சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் பூஜை துவங்கப்பட்டு 164 நாட்களுக்கு பிறகு இந்த அப்டேட் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு பாங்காக் செல்லவுள்ளது.

நடிகர் அஜித்தின் துணிவு

நடிகர் அஜித்தின் துணிவு

நடிகர் அஜித்தின் 61வது படமாக உருவாகியுள்ளது துணிவு. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஐதராபாத்தில் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

பாங்காக்கில் சூட்டிங்

பாங்காக்கில் சூட்டிங்

ஐதராபாத்தில் நீண்ட நாட்கள் இந்த சூட்டிங் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக பூனாவில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடந்தது. தொடர்ந்து அடுத்ததாக பாங்காக்கில் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

தாமதமாகும் சூட்டிங்

தாமதமாகும் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் நிதி நெருக்கடியால் தாமதமாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், சூட்டிங்கின் இடையில் கிடைத்த இடைவெளியில், பிரிட்டன் லடாக் என்று தனது சுற்றுப் பயணங்களில் கவனம் செலுத்தினார் அஜித். இந்தப் பயணத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

டைட்டில் -போஸ்டர் வெளியீடு

டைட்டில் -போஸ்டர் வெளியீடு

இந்நிலையில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதை தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் போனிகபூரை தொடர்ந்து ட்ரெண்ட் செய்தனர். அவரை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். இதன் சூடு தாங்க முடியாமலோ என்னவோ நேற்றைய தினம் அவர் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

164 நாட்கள் கழித்து அப்டேட்

164 நாட்கள் கழித்து அப்டேட்

இந்த அப்டேட் படத்தின் சூட்டிங் துவங்கி 164 நாட்கள் கழித்து வெளியாகியுள்ளது. இதுபோன்று இதுவரை அஜித் ரசிகர்களின் பொறுமையை யாரும் சோதித்தது இல்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் இன்றும் நாளையும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யை பின்பற்றும் அஜித்?

விஜய்யை பின்பற்றும் அஜித்?

விஜய்யின் வாரிசு படத்திலும் அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் 3 போஸ்டர்கள் வெளியாகின. இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் 2 போஸ்டர்கள் வெளியாகவுள்ளன. இதையொட்டி விஜய்யை அஜித் பின்பற்றுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளன.

விஜய் -அஜித் படங்கள்

விஜய் -அஜித் படங்கள்

இதனிடையே நீண்ட காலங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது ரசிகர்கள் சாதாரண அப்டேட்களுக்கே முட்டிக் கொள்ளும் நிலையில், இருவரது படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாவது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X