ஓடிடியிலும் கலக்கும் துணிவு படம்.. நெட்பிளிக்சில் முதல் 3 இடங்களில் ட்ரெண்டிங்!
சென்னை : நடிகர் அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது துணிவு படம்.
பொங்கலையொட்டி ரிலீசான துணிவு படம் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் ஓடிடியிலும் படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் சிறப்பாக அமைந்திருந்தது.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய ஹெச் வினோத் மூன்றாவது முறையாக இயக்கிய படம் துணிவு. இந்தப் படங்களை போனிகபூர் தயாரித்திருந்த நிலையில், படங்கள் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் மழையை பொழிந்தது.

பொங்கல் ரிலீஸ்
கடந்த 11ம் தேதி பொங்கல் ரிலீசாக சர்வதேச அளவில் துணிவு படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டிருந்தது.

வங்கி கொள்ளை
படத்தில் வங்கிகளில் எத்தகைய பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதை கதைக்களமாக கொண்டிருந்தார் ஹெச் வினோத். வங்கிக் கொள்ளையையும் இந்தப் படத்தில் கதைக்களமாக கொண்டிருந்தார் வினோத். படத்தில் மஞ்சு வாரியரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

நெட்பிளிக்சில் துணிவு படம்
படம் திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்சிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படம் ஓடிடியிலும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படத்தை ரிப்பீட்டட் ஆடியன்ஸ் பார்த்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முதல் 3 இடங்களை பிடித்த துணிவு படம்
இந்நிலையில் நெட்பிளிக்சில் முதல் 3 இடங்களில் துணிவு படம் முன்னிலை வகித்து வருகிறது. 4வது இடத்தில் வத் மற்றும் 5வது இடத்தில் மிஷன் மஞ்சு ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆயினும் முதல் 3 இடங்களில் துணிவு படம் உள்ளது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏகே62 படம்
துணிவு சக்சஸை அடுத்து தனது ஏகே62 படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தை 6 மாதத்திற்குள் முடித்து, தீபாவளி ரிலீசாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











