Don't Miss!
- News
"சதுரங்க ஆட்டம்".. கமலாலய வாசற்படியில், அதிமுக புள்ளிகள் "வெயிட்டிங்".. நறுக்குனு சொன்ன தயாநிதி மாறன்
- Finance
90 நாளில் 4.65 லட்சம் கார் விற்பனை.. Maruti Suzuki நிறுவனத்தின் லாபம் 130% உயர்வு..!
- Sports
அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு
- Lifestyle
நீங்க 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவரா?அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
லீக்கானது அஜித்தின் சில்லா சில்லா பாடல் வீடியோ?.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் சில்லா சில்லா பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
சூப்பர்டா.. அவரும் நம்ம நண்பர் தான.. ரெண்டு படமும் ஓடும்.. துணிவு பற்றி விஜய் பேச்சு.. ஷாம் பேட்டி!

அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. அவரது முந்தைய படங்களான நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய ஹெச் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் துணிவு படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்தின் அடுத்தடுத்த ஸ்டில்கள்
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில், அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அஜித்தின் அடுத்தடுத்த ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. துப்பாக்கி சகிதம் அஜித்தின் அடுத்தடுத்த ஸ்டில்ஸ் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. இதனிடையே படத்தில் அவரது சில்லா சில்லா பாடல் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சில்லா சில்லா பாடல் லீக்?
ஆனால் தற்போது சில்லா சில்லா பாடலின் 10 வினாடிகள் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல் லீக்காகியுள்ளது குறித்து படக்குழுவினர் தற்போது அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலும் வெளியீட்டிற்கு முன்னதாக லீக்கான நிலையில் தற்போது சில்லா சில்லா பாடலும் லீக்காகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாடலுக்கான முன்னோட்டம்
ஆனால் லீக்கான இந்தப் பாடல் கிளியராக இல்லாமல் உள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 9ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் பாடலுக்கான முன்னோட்டமாகவும் தற்போது லீக்காகியுள்ள இந்தப் பாடல் அமைந்துள்ளது. ஆனால் இந்த பாடலை அதிகமாக பகிர வேண்டாம் என்று படக்குழுவினர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹெச் வினோத் விளக்கம்
துணிவு படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளன. தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் ஹெச் வினோத், தன்னுடைய பேட்டியில் படத்தின் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். படத்தின் இயக்கம் தாமதமானதாலேயே தீபாவளிக்கு ரிலீசாக வேண்டிய படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.