என்னது அதுக்குள்ள வலிமை படம் ரிலீசாகி ஒரு வருஷம் ஆயிடுச்சா.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அஜித்தின் 61வது படமான துணிவு கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் அஜித் நடித்து வெளியான 3வது படம்.
முன்னதாக கடந்த ஆண்டில் இந்த மூவர் கூட்டணியில் வெளியானது வலிமை படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மிரட்டியது.

நடிகர் அஜித்
நடிகர் அஜித் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கிக் கொண்டு நடித்து வருகிறார். அவரது ஏகே62 படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ள நிலையில், படத்தின் பூஜை எளிமையான அளவில் போடப்பட்டு சூட்டிங் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை விரைவில் சூட்டிங் முடிக்க படக்குழு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி
முன்னதாக தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மகிழ் திருமேனி. இந்தப் படங்கள் அருண் விஜய்க்கு சிறப்பான கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன. இந்நிலையில், மகிழ் திருமேனிக்கு அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

அடுத்த மாதத்தில் சூட்டிங்
லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு டெவில் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்பிற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுத்தமான தமிழ் பெயர்களையே மகிழ் திருமேனி தன்னுடைய படங்களுக்கு தலைப்பாக தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒரு ஆண்டை பூர்த்தி செய்த வலிமை
இது இப்படி இருக்க அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியான வலிமை படம் ரிலீசாகி இன்றைய தினம் ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்தப் படத்தின் ஸ்டண்ட் உள்ளிட்ட காட்சிகளை பகிர்ந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மூவர் கூட்டணி
இந்த மூவர் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் கடந்த மாதத்தில் வெளியான துணிவு என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. இதில் வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிரட்டியது. சிங்கிளாக ரிலீசான இந்தப் படம் முதல் நாளில் மட்டும் 36 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் வசூலித்தது.

வசூலில் மிரட்டல்
படம் மொத்தத்தில் 200 கோடி ரூபாய்களை வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இன்னும் சில விஷயங்களில் இந்தப்படம் மற்ற படங்களை காட்டிலும் முன்னணியில்தான் உள்ளது. இந்தப் படத்தின் அதிகபட்சமான ஸ்டண்ட் காட்சிகள் படத்தின் பின்னடைவாக அமைந்தது.

ஓராண்டு நிறைவு
தற்போது படம் ஓராண்டு நிறைவையொட்டி படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயா ட்விட்டரில் உற்சாக பதிவை வெளியிட்டுள்ளார். படத்தின் ஓராண்டு கொண்டாட்டத்தையொட்டி சில திரையரங்குகளில் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் வாழு வாழவிடு என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்ட இந்தப்படம் அஜித் கேரியரில் சிறப்பாகவே அமைந்தது.


Click it and Unblock the Notifications











