வாவ்.. ஒரு வழியாய் போனி கபூர் கொடுத்த வலிமை அப்டேட்.. செம குஷியில் ரசிகர்கள்!
சென்னை: அஜித்தின் வலிமை பட அப்டேட் குறித்த தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச் வினோத்துடன் நடிகர் அஜித் மீண்டும் கைகோர்த்துள்ள படம் வலிமை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்டேட் இல்லை
சூழ்நிலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டிலுக்கு பிறகு பெரிதாக படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வந்தது போன்று தெரியவில்லை.

அஜித் வருத்தம்
இதனால் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் பிரதமர், முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் கேட்டு வருகின்றனர். இதனால் வருத்தப்பட்ட அஜித், தன்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் முக்கிய தலைவர்களிடம் வலிமை அப்டேட் கேட்பது வருத்தமடைய செய்துள்ளது.

அஜித் வேண்டுகோள்
தன்னுடைய ரசிகர்கள், கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்றும் படக்குழு அப்டேட்டை கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். இருந்த போதும் வலிமை படத்தின் அப்டேட் தொடர்பாக நாள் தோறும் ஏதாவது ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
வலிமை அப்டேட்
இந்நிலையில் ஒரு வழியாக வலிமை படத்தின் அப்டேட் தொடர்பான தகவலை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன்ஸ் அஜித்தின் 50வது பிறந்த நாளான வரும் மே 1ஆம் தேதி முதல் தொடங்கும் என பதிவிட்டுள்ளார்.

ட்ரென்டாகும் ஹேஷ்டேக்
போனி கபூரின் இந்த பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். #ValimaiFirstLookOnMay1st என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

யுவன் இசை
மேலும் யோகி பாபு, குர்பானி, புகழ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











