Ajith :மே இறுதி வாரத்தில் துவங்கும் விடாமுயற்சி சூட்டிங்.. ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் இன்றைய தினம் தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால் அவர் தற்போது நேபாளத்தில் உள்ளார்.

அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவரது ஏகே62 படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதும் அனிருத் இசையமைக்கவுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting to be starts on May end

விடாமுயற்சி சூட்டிங் :நடிகர் அஜித்குமார் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து இருந்து வருகிறார். தன்னுடைய ரசிகர் மன்றம் உள்ளிட்டவற்றை அவர் ஆதரிப்பதில்லை. ஆயினும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் அஜித் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆயினும் அவர் தற்போது சென்னையில் இல்லை. நேபாளத்தில் தன்னுடைய பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது பூடானில் உள்ளார்.

இவரது ஏகே62 படத்தின் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. Efforts never fail என்றும் சப் டைட்டிலில் கூறப்பட்டுள்ளது. தற்போது நேபாளத்தில் சுற்றுப் பயணத்தில் உள்ள அஜித், அதை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவுடன் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting to be starts on May end

படத்தை முன்னதாக கூறியபடி மகிழ்திருமேனி இயக்கவுள்ளதும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளதும் அனிருத் இசையமைக்கவுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் தான் பணியாற்றவுள்ளது கனவு நனவான தருணம் என்று மகிழ்திருமேனி தெரிவித்துள்ளார். படத்தில் சிறப்பான சம்பவம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting to be starts on May end

இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராய் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரியில் வெளியான அஜித்தின் துணிவு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் 300 கோடி ரூபாயை தாண்டியது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்திற்கு தற்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X