Ajith :அடுத்த வாரத்தில் துவங்கும் விடாமுயற்சி சூட்டிங்.. மீண்டும் இணையும் அஜித் -த்ரிஷா!
சென்னை : நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் அதிகமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கடந்த மே மாதத்திலேயே அஜித் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து சூட்டிங் தள்ளி போவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு வழியாக இந்தப் படத்தின் சூட்டிங் குறித்து தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் அஜித் -த்ரிஷா : நடிகர் அஜித்தின் 62வது படம் அதிகமான குழப்பங்களுடன் தொடர்ந்து சூட்டிங் தாமதமாகி வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், படத்தில் இயக்குநராக கமிட்டாகியிருந்த விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டார். தொடர்ந்து மகிழ்திருமேனிக்கு அந்த சான்ஸ் கிடைக்க படம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து மேற்கொள்ளாமலேயே இருந்தனர். இதனிடையே கடந்த மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில், மகிழ் திருமேனிதான் இயக்குநர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்கள் நாளொன்றுக்கு மாற்றி மாற்றி வந்துக் கொண்டிருக்கிறது. ஜூன் முதல் வாரத்திலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும், வயநாட்டில் தன்னுடைய பைக் பயணத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் வந்தவுடனே படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அஜித் வந்தும் சூட்டிங் துவங்காத நிலையில், தற்போது அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் விடாமுயற்சி படத்தின் முன் தயாரிப்பு பணிக்காக லண்டனில் உள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் தாமதமாக லைகாதான் காரணம் என்றும் தயாரிப்பு நிறுவனத்தை அஜித் மாற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஒருவழியாக இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த வாரத்தில் புனேவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் லண்டனில் இருந்து அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் சென்னை திரும்பும் நிலையில், படத்தின் சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.இநதப் படத்தில் அர்ஜூன்தாஸ் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் அஜித் ஜோடியாக நடிகை த்ரிஷா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு சம்மர் கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நடிகை த்ரிஷா அஜித்துடன் ஐந்தாவது முறையாக இணைந்துள்ளார். இவர்களின் ஜோடி மங்காத்தாவில் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து என்னை அணிந்தால் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











