இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கவுண்ட் துவங்கிய ஷாலினி.. ஒரே நாளில் இத்தனை பாலோயர்களா?

சென்னை : நடிகர் அஜித்தின் மனைவியும் முன்னாள் ஹீரோயினுமான நடிகை ஷாலினி தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் இவரை பின்தொடர்ந்துள்ளனர்.

பிரபலமான நடிகையாக இருந்தபோது நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஷாலினிக்கு தற்போது சிறப்பான ரசிகர்கள் காணப்படுவதை இது காட்டுகிறது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

சர்வதேச அளவில் சிறப்பான நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவரது சமீபத்திய படங்களில் சமூக அக்கறையும் தென்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் பெண்களுக்கு ஆதரவான கருத்துக்கள் இருந்த நிலையில் வலிமை படத்தில் போதை கலாச்சாரம் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே அடுத்ததாக இவரது நடிப்பில் துணிவு படம் வரும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

ஷாலினி அஜித்குமார்

ஷாலினி அஜித்குமார்

இதனிடையே நடிகர் அஜித்தின் மனைவியும் முன்னாள் நாயகியுமான ஷாலினிக்கு தற்போதும் ஃபேன்பேஸ் உள்ளது. இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவை அனைத்தும் சிறப்பான படங்களாக அஜித், விஜய், பிரஷாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்த படங்களாக ஷாலினிக்கு அமைந்தது. குறிப்பாக விஜய்யுடன் காதலுக்கு மரியாதை மற்றும் அஜித்துடன் அமர்க்களம் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஷாலினி.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஷாலினி

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஷாலினி

இந்தப் படங்களில் தன்னுடைய குடும்பத்தினரால் கொண்டாடப்படுபவராக நடித்திருந்தார் ஷாலினி. நிஜத்தில் இந்தப் படங்களுக்காக தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அமர்க்களம் படத்தில் நடித்தபோதுதான் அஜித்துடன் காதல் வயப்பட்டு, அது திருமணத்தில் முடிந்தது. தற்போதுவரை தன்னுடைய கணவர் அஜித்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவ்வப்போது விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தன்னுடைய குடும்பத்தினருடன் கூட்டாக சென்று திரையரங்குகளில் பார்ப்பதை இவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி

எந்தவிதமான புகழ் வெளிச்சத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தன்னுடைய கணவர், குடும்பம், குழந்தைகள் என தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த ஷாலினி, தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி, அஜித் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இது தற்போது அவரது பாலோயர்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் லட்சம் பாலோயர்கள்

24 மணிநேரத்தில் லட்சம் பாலோயர்கள்

ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்த 24 மணிநேரத்தில் அவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதற்கும் மேலாக அவர் இரண்டு பதிவுகளை மட்டுமே பகிர்ந்துள்ளார். அஜித்துடன் இருக்கும்படியான இரண்டு புகைப்படங்களை ஷாலினி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X