மீண்டும் ஷாலினி கர்ப்பம்... ?
சென்னை: ஷாலினி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் நடிகர் அஜீத் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் 'அமராவதி' படம் மூலம் அறிமுகமானவர் அஜீத். 'அமர்க்களம்' படத்தில் நடிக்கும்போது தன்னுடன் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 4 வயதில் அனோஸ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் தற்போது ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தல 55...
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள்.

விறுவிறு படப்பிடிப்பு...
பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் அஜீத் ஒரு குழந்தையின் தந்தையாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தல ஹேப்பி அண்ணாச்சி....
இந்நிலையில், ஷாலினி இரண்டாம் முறையாக கர்ப்பமாகி இருப்பதால் அஜீத் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாராம்.

கவனிப்பு...
படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும் கர்ப்பமாக உள்ள மனைவி ஷாலினி மற்றும் மகளை கவனமாக பார்த்து வருகிறாராம் அஜீத்.


Click it and Unblock the Notifications











