கப்பு முக்கியம் பிகிலு.. மாதவன் மகனை போலவே விளையாட்டில் ஆர்வம் காட்டும் அஜித் மகன்!
சென்னை: சினிமா நடிகர்களின் மகன்கள் ஹீரோவாகவோ சினிமாவில் பிரபலங்களாகவோ மாறி வருவதை நெப்போடிசம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பல நடிகர்கள் தங்களை போலவே தங்கள் குழந்தைகளையும் தங்களுக்கு தெரிந்த ஃபீல்டிலேயே அறிமுகம் செய்து வைப்பதாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மாதவன் தனது மகனை நீச்சல் விளையாட்டில் ஜாம்பவனாக மாற்றியுள்ள நிலையில், நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்தாட்ட போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏகப்பட்ட திறமைக்கு சொந்தக்காரர் அஜித்
வெறும் சினிமா மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல், டிரோன் டெக்னாலஜி, போட்டோகிராஃபி, சமையல் கலை என பல கலைகளில் ஜாம்பவான நடிகர் அஜித் அசத்தி வருகிறார். இந்நிலையில், அவரது மகன் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டி வரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு நடிகர்கள்
சியான் விக்ரம் அவரது மகனான துருவ் விக்ரமை சினிமாவில் ஹீரோவாக களமிறக்கி உள்ளார். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என ஏகப்பட்ட வாரிசு நடிகர்கள் சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், மற்ற முன்னணி நடிகர்கள் தங்கள் குழந்தைகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக விளையாட்டுத் துறைகளில் ஆர்வம் செலுத்த வைத்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் மகனும் அடுத்து நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ மாற முயற்சித்து வருகிறார். சினிமாவில் தங்கள் குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் பெற்றோர்கள் அதற்கான பாதையை எளிதில் அமைத்துக் கொடுத்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் சமீபத்தில் ஹீரோயின் ஆனது குறிப்பிடத்தக்கது.

மாதவன் மகன்
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் இருக்கும் அழகுக்கு சினிமாவில் எளிதில் ஹீரோவாகி விட முடியும். ஆனால், அப்பாவை போல மேக்கப் போட்டு நடிப்பதில் ஆர்வம் செலுத்தாமல் நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார் வேதாந்த். சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் கூட 5 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அஜித் மகன் ஆத்விக்
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் தற்போது கால்பந்து விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சிறுவனாக இருக்கும் போதே விளையாட்டில் அவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக ஆத்விக்கின் அம்மா நடிகை ஷாலினி அஜித் மகனின் ஆசையை நிறைவேற்ற தேவையான விஷயங்களை கவனித்து வருகிறார்.

சென்னை அரினாவில் அலைபாயுதே
அம்மா ஷாலினியுடன் மகன் ஆத்விக் சென்னையின் எஃப்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த கால்பந்தாட்ட அணியின் ட்விட்டர் பக்கத்தில் "மெரினா அரீனாவில் அலைபாயுதே" என்கிற கேப்ஷனுடன் போட்டுள்ளனர். நடிகர் அஜித்தின் ரசிகர்கள் குட்டி தலயை பார்த்ததும் வேற லெவல் க்யூட்னஸ் என கொஞ்சி வருகின்றனர்.

கப்பு முக்கியம் பிகிலு
நடிகர் விஜய் பிகில் படத்தில் ராயப்பனாக "கப்பு முக்கியம் பிகிலு" என வசனக் காட்சிகளை கட் செய்து போட்டு ரசிகர்கள் ஆத்விக்கை பாராட்டி வருகின்றனர். கால்பந்தாட்ட விளையாட்டை அம்மாவுடன் கண்டு ரசிக்க ஜூனியர் அஜித் சென்றுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதற்கு அதிகளவில் லைக் போட்டு வருகின்றனர்.

படிப்பில் ஆர்வம் செலுத்தும் மகள்
அஜித்தின் மகள் அனோஷ்கா படிப்பில் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பா ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், இரண்டு குழந்தைகளும் அம்மா ஷாலினியின் அரவணைப்பில் அருமையாக வளர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அனோஷ்கா அஜித் ஷாலினியுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.


Click it and Unblock the Notifications











