Ajith in Airport :வேணாம்பா நானே பார்த்துக்குறேன்.. ஏர்போர்ட்டில் மாஸ் காட்டிய அஜித்!

சென்னை : நடிகர் அஜித்குமார் படங்களில் நடிப்பதுடன் தன்னுடைய சிறப்பான செயல்பாடுகள் மூலமாகவும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்ததாக அஜித் நடிப்பில் ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajith spotted in Chennai airport and refused the help of his fan

நடிகர் அஜித்குமார், அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. ஆயினும் படத்தின் வசூல் மிரட்டியது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என மூன்று படங்களும் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த 3 படங்களையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகி படத்தின் சூட்டிங்கும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை லைகா தயாரிக்கவுள்ளது.

Actor Ajith spotted in Chennai airport and refused the help of his fan

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து துக்கத்தில் இருந்த அஜித் தற்போது வெளியில் வந்துள்ளார். அவர் வெளியூர் பயணத்திற்காக தற்போது சென்னை விமானநிலையத்திற்கு வந்துள்ளார்.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கலர்ந்துள்ளார். ஸ்மார்ட்டான லுக்கில் அஜித் காணப்பட்ட நிலையிலும், அவரது முகத்தில் வாட்டம் காணப்பட்டது. இதனிடையே மிகப்பெரிய லக்கேஜை அவர் வைத்திருந்தார். அந்த லக்கேஜை ரசிகர் ஒருவர் கைப்பற்றி அவருக்கு உதவ செய்ய முற்பட்ட நிலையில், அதை நாசுக்காக மறுத்தார் அஜித். தன்னுடைய லக்கேஜை தானே சுமப்பதுதான் முறை என்பதை அவர் அந்த ரசிகருக்கு உணர்த்தியுள்ளார்.

Actor Ajith spotted in Chennai airport and refused the help of his fan

நடிகர் அஜித் எப்போதுமே தன்னுடைய கொள்கைகளை மிகவும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வருபவர். தான் இப்படித்தான் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர். யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாதவர். ரசிகர்களுக்கு மட்டும் அவர் எப்போதும் சிறப்பான மரியாதையை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதை எப்போதுமே அவர் மறுத்ததில்லை. அந்த வகையில் தற்போது விமானநிலையத்திற்கு வந்த அஜித், தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X