அஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா!
நடிகை நயன்தாராவுக்கு நடிகர் அஜித் போட்டோ ஆல்பம் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: விசுவாசம் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவை போட்டோ எடுத்து, அதை ஆல்பமாக்கி பரிசளித்துள்ளார் நடிகர் அஜித்.
அஜித், நயன்தாரா நடித்து வரும் படம் விசுவாசம். சிறுத்தை சிவா தொடர்ந்து 4வது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

பைக், கார் ரேஸ் பிரியரான அஜித், அதற்கடுத்தபடியாக ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது சமீபத்திய ஆர்வம் புகைப்படக் கலை பக்கம் திரும்பி இருக்கிறது.
எப்போதும் கையில் கேமராவுடன் வலம் வரும் அஜித், படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளை புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற விசுவாசம் படப்பிடிப்பின் போது, நயன்தாராவை விதவிதமாக ஸ்டில் எடுத்த அஜித், அதை ஆல்பமாக பிரின்ட் போட்டு, நயன்தாராவுக்கு பரிசாக வழங்கினார். இதனால், அசந்துபோன நயன்தாரா, அஜித்தை நினைத்து நெகிழ்ந்து போனதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நடிகர் அப்புக்குட்டியையும் இதேபோல் விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் எடுத்து அஜித் பரிசளித்தது நினைவுக்கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











