Ajith -trisha photo: அஜித் -த்ரிஷா க்யூட் போட்டோ..அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்!

சென்னை: நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் இநத்ப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் தொடர்ந்து நடந்துவரும் சூழலில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நடிகர் அஜித் சிறிய இடைவெளி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல டொவினோ தாமஸ் படத்திற்காக நடிகை திரிஷாவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்திலிருந்து கேப் எடுத்துக் கொண்டு நாடு திரும்பினார். இவர்கள் இருவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி படத்தின் டைட்டில் மற்றும் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும் படத்தின் சூட்டிங் தாமதமாகவே துவங்கியது. அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் துவங்கி ஒரு மாதத்திற்கும் மேல் நடந்த நிலையில், இடையில் சிறிது கேப் எடுத்துக் கொண்ட படக்குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சூட்டிங்கை துவங்கி நடத்தி வருகின்றனர். இந்த இரண்டாவது ஷெட்யூலில் அஜித், அர்ஜூன் இணைந்த கார் சேஸிங் காட்சிகளை படமாக்கினர்.

Actor Ajith -Trisha picture from Vidaamuyarchi shooting spot released

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித் மற்றும் திரிஷா முன்னதாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான கமெண்ட்களை பெற்றுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை தொடர்ந்து சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதையடுத்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர்.

அசர்பைஜான் சூட்டிங்: விமானநிலையத்தில் இருந்து இவர்கள் அசர்பைஜான் புறப்பட்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அசர்பைஜானில் அஜித், அர்ஜூன் இணைந்த கார் சேஸிங் காட்சிகளின் சூட்டிங் படமாக்கப்பட்டன. இதன்போது நடிகை திரிஷா சென்னை திரும்பினார். டொவினோ தாமசுடன் திரிஷா இணைந்துள்ள படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றார். இந்த சூட்டிங்கின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகக்ளை உற்சாகப்படுத்தியுள்ளன. இதையடுத்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கில் திரிஷா இணையவுள்ளார்.

இடைவெளி எடுத்த அஜித்: இதனிடையே புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அஜித்தும் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு லண்டன் சென்றுள்ளார். அவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அசர்பைஜான் சூட்டிங்கின்போது அஜித் மற்றும் திரிஷா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக ஸ்லிம் லுக்கில் அஜித் மாறியுள்ள நிலையில் இந்த ஜோடி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

திரிஷா அடுத்தடுத்த படங்கள்: நடிகை திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இந்தப் படங்களின் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் திரிஷா கமிட்டாகி வருகிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் திரிஷா, அடுத்ததாக டொவினோ தாமசுடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் சல்மான் கான் -விஷ்ணு வர்தன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார். தன்னுடைய ரீ என்ட்ரியை மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார் திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X