18 மாதங்களுக்கு நோ சூட்டிங்.. வெளியானது அஜித்தின் திட்டம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் விரைவில் இணையவுள்ளார் நடிகர் அஜித்.

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் சில மாங்களுக்கு படங்களில் நடிக்காமல் வேறு திட்டத்தை நடைமுறை படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் துணிவு படம்

அஜித்தின் துணிவு படம்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் 3வது முறையாக துணிவு படத்தில் ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கே ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பேங்க் கொள்ளையை மையமாக கொண்ட படம்

பேங்க் கொள்ளையை மையமாக கொண்ட படம்

இந்தப் படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிகர் அ4த் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் பாங்காக் போன்ற இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

மவுண்ட் ரோடில் நடைபெற்ற சூட்டிங்

மவுண்ட் ரோடில் நடைபெற்ற சூட்டிங்

படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், சில பேட்ச் வொர்க்குகளை சென்னை மவுண்ட்ரோடில் நேற்றைய தினம் இயக்குநர் ஹெச் வினோத் எடுத்தார். முன்னதாக ஐதராபாத்தில் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான மவுண்ட்ரோடு மற்றும் வங்கியின் செட்கள் போடப்பட்டு எடுக்கப்பட்டன.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை


ஐதராபாத்தில் எளிமையாக படத்தின் பூஜை போடப்பட்டு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் டைட்டில் உள்ளிட்டவற்றை வெளியிட ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் 164 நாட்கள் கழித்து படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

விஜய் -அஜித் படங்கள் மோதல்

விஜய் -அஜித் படங்கள் மோதல்

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் -அஜித் படங்கள் வாரிசு மற்றும் துணிவு இந்தப் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏகே62 படத்தில் நடிகர் அஜித் இணையவுள்ளார்.

விரைவில் ஏகே62 படத்தின் சூட்டிங்

விரைவில் ஏகே62 படத்தின் சூட்டிங்

இந்தப் படத்தில் நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். வரும் ஜனவரியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு 18 மாதங்கள் அஜித் இடைவெளி எடுத்துக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

18 மாத கால இடைவெளி

18 மாத கால இடைவெளி

இந்த காலத்தில் தன்னுடைய உலக பைக் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளாராம். மொத்தமாக 62 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த 18 மாதங்களை தொடர்ந்தே அவர் அடுததப் படங்களில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X