மகளுடன் டாடா படத்தை பார்க்க வந்த ஷாலினி அஜித்.. இணையத்தில் தெறிக்கும் வீடியோ!

சென்னை : பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டாடா படம்.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகியுள்ள டாடா படம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கவினின் டாடா படம்

கவினின் டாடா படம்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவரது நடிப்பில் இன்றைய தினம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டாடா படம். இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா தாஸ்.

சிறப்பான விமர்சனங்கள்

சிறப்பான விமர்சனங்கள்

இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் இயல்பான நடிப்பை படத்தில் வழங்கியுள்ளதாகவும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஃபீல் குட் படத்தை பார்த்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். படத்தை குடும்பத்தினருடன் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறப்பான பின்னணி இசை

சிறப்பான பின்னணி இசை

மேலும் படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டாடா படம் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும் என்றும் கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது. இயக்குநர் கணேஷ் கே பாபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கவினின் சிறப்பான நடிப்பு

கவினின் சிறப்பான நடிப்பு

மேலும் கவினுக்கு நடிப்பு இயல்பாக வருவதாகவும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளன. காமெடி, சென்டிமெண்ட், கோபம் என அனைத்தையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் க்ளைமாக்சில் அபர்ணா தாசின் நடிப்பு வெறித்தனமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். கவினின் நடிப்பு மாஸாக உள்ளதாகவும் படம் பிளாக் பஸ்டர் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

டாடா படத்தை பார்த்த ஷாலினி அஜித்

டாடா படத்தை பார்த்த ஷாலினி அஜித்

இத்தகைய சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ள டாடா படத்தை முன்னாள் நடிகையும் பிரபல நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி அஜித், தன்னுடைய மகள் அனொஷ்கா மற்றும் தங்கை ஷாம்லியுடன் பிரபல திரையரங்கில் பார்க்க வந்திருந்தார். இதன்போது அனொஷ்கா அனைவரையும் கவர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X