Ajith: அடுத்தடுத்து மாஸ் இயக்குநர்களுடன் இணையும் அஜித்.. எக்குத்தப்பாக உயர்ந்த அஜித்தின் சம்பளம்!

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 4ம் தேதி அஜர்பைஜான் தலைநகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Actor Ajith will join his next projects with Adhik ravichandran & Vetrimaaran it seemsActor Ajith will join his next projects with Adhik ravichandran & Vetrimaaran it seems

இந்தப் படத்திற்காக நடிகர் அஜித், 110 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து மாஸ் இயக்குநர்களுடன் இணையும் அஜித்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படம் அவருக்கு விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் ஹெச் வினோத் கொடுத்திருந்தார். வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் மஞ்சு வாரியரும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜான் தலைநகரில் தற்போது நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் நடக்கவுள்ளதாகவும் அஜர்பைஜான், துபாய் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்காக மொத்தமாக 110 நாட்கள் அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார். அவரும் தற்போது படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். விரைவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் ஒரேகட்டமாக எடுத்து முடிக்கப்பட உள்ளதாகவும் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அஜித்தின் அடுத்தப்படங்கள் குறித்த தகவல்களும் தற்போது மாஸாக வெளியாகி வருகின்றன.

அடுத்ததாக சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன், அவர் தன்னுடைய வாழ்க்கையையே மாற்றியுள்ளதாக மார்க் ஆண்டனி படத்தின் ப்ரமோஷன்களின்போது தெரிவித்திருந்தார். டைம் ட்ராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித்தின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன்தான் அடுத்ததாக அஜித்தின் ஏகே63 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விடுதலை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள எல்ரெட் குமார் தன்னுடைய ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்திற்காக நடிகர் அஜித்திற்கு 170 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அஜித்தின் ஏகே64 படத்தின் இயக்குநர் குறித்தும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாகும். முன்னதாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன் என அடுத்தடுத்த மாஸ் இயக்குநர்களுடன் அஜித் இணையவுள்ளது அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X