Actor Ajithkumar: காலையில இங்க.. மாலையில அங்க.. அஜித்தின் வேற லெவல் பிளான்!
ஐதராபாத்: நடிகர் அஜித் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டிலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சூழலில் ஐதராபாத்திலேயே குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் படங்களின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளது.

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் 6 மாதங்களுக்கு தாமதப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த மாதத்தில் அசர்பைஜானிலேயே படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்யப்பட்டு படக்குழுவினர் நாடு திரும்பினர். இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஐதராபாத் சூட்டிங்: இந்த ஷூட்டிங்கில் அஜித் -அர்ஜுன் காம்பினேஷன் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். படத்தில் அஜித்திற்கு வில்லனாகியுள்ளார் அர்ஜுன். இன்னும் சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்படவுள்ள நிலையில், ஒருபக்கம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது. விடாமுயற்சி படம் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் நீண்ட காலங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை திரிஷா. இவர்களின் காம்பினேஷன் காட்சிகள் அசர்பைஜானில் அதிகமான அளவில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ஹைதராபாத்திலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல மணிநேர சூட்டிங்: இதனிடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கும் தற்போது ஐதராபாத்தில் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை ஒட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே இடத்தில் இரண்டு படங்களின் சூட்டிங்கும் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. காலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங், மாலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் என ஒரு நாளில் 21 மணிநேரம் அஜித் பிசியாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளை கடந்து அவரது அடுத்த படமான விடாமுயற்சி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஒன்று இரண்டு மாத இடைவெளியில் அவரது அடுத்த படமான குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ளது அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த உற்சாகத்தை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுக்கும்வகையில் தற்போது அஜித் மிகவும் டெடிகேஷனுடன் பணியாற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications











