பணம் செட்டில் போல! விடாமுயற்சியை கைவிடாத அஜித்.. அஜர்பைஜானுக்கு பறக்க சென்னை விமானநிலையம் வந்த ஏ.கே!
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தினை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க லைகா புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகின்றது. படத்தில் அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகின்றனர். படப்பிடிப்பின் போது டூப் இல்லாமல் நடிகர் அஜித் மற்றும் ஆரோவ் நடித்திருந்த விபத்து காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடைபெற்று வருகின்றது. கதையும் அதற்கு ஏற்றவாறே அமைக்கப்பட்டுள்ளது.
விடமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோதே நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித் மிகவும் மெனக்கெடலுடன் நடித்தார் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

விடமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது நடிகர் அஜித்குமாருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுமட்டும் இல்லாமல், தயாரிப்பு நிறுவனமான லைகா புரெடெக்ஷனுக்கும் அஜித்குமாருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்தின் பேச்சினை அஜித் கண்டுகொள்ளாமலே இருந்ததாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தது.
விடாமுயற்சி: இந்நிலையில் இன்று முதல் அதாவது 20ஆம் தேதியில் இருந்து அஜர்பைஜானில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே படக்குழு அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அஜித் அஜர்பைஜானுக்குச் செல்லாமல், திருப்பதி கோவிலுக்குச் செல்வது, தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியானது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இதனால் அஜித்குமாருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையில் இருந்த பிரச்னை இன்னும் தீரவில்லை என கூறப்பட்டது. மேலும் அஜித்குமார் இந்த படத்திற்கு கொடுத்த நாட்களில் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை நடத்தவில்லை எனவும் அதுவும் அஜித்தின் கோபத்திற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. இப்படியான நிலையில் அஜித்குமார் இன்று அஜர்பைஜானுக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அஜித்தை வீடியோ எடுத்த ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்களும் தங்கது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இவை தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

செட்டில் ஆன பணம்: அஜித் அஜர்பைஜானுக்கு புறப்பட்டுவிட்டதால், அஜித்குமாருக்கும் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரெடக்ஷனுக்கும் இடையிலான பணப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











