Actor Ajith: தொடர்ந்து பைக் பயணத்தில் அஜித்.. எப்பதான் சார் விடாமுயற்சி படத்தில் நடிப்பீங்க?

சென்னை: நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் மகிழ் திருமேனியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறாமல் நீடித்து வருகிறது. இதனிடையே அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே துவங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடையாததால் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

அதற்குள் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்துவிடும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு தொடர்ந்து இரு மாதங்கள் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு நடத்தப்பட்டது. இதனிடையே, அங்கு சூட்டிங் நடத்த தேவையான காலச்சூழல் இல்லாததால் சூட்டிங் இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் வரும் ஏப்ரலில் அங்கேயே சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகிவருகிறது.

Actor Ajithkumar continues his Bike tour with his team

நடிகர் அஜித் : நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டின் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. முன்னதாக இந்தப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அஜித் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. தொடர்ந்து உடனடியாக சூட்டிங் துவங்கப்படாமல் இருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்சன் படமாக விடாமுயற்சி உருவாகி வருகிறது.

விடாமுயற்சி படம்: முன்னதாக மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த நிலையில் தற்போது அஜித்தின் படமும் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் ரசிகர்களின் பொறுமையை தொடர்ந்து இந்தப்படம் சோதித்து வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படம் கடந்த தீபாவளியையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகளை இந்தப் படம் சூட்டிங்கிலேயே கடந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தாமதமாகும் விடாமுயற்சி படம்: இதனிடையே அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆயினும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவு பெறாத நிலையில் அஜித் இந்தப் படத்தில் இணைய முடியாத சூழலில் உள்ளார். இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் அதற்கு முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவு பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு தொடர்ந்து இரண்டு மாதங்களில் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பைக் டூரில் பிசியான அஜித்: படத்தின் ஷூட்டிங் துவங்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் அஜித் தொடர்ந்து தன்னுடைய டீமுடன் இணைந்து பைக் பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இடையில் தன்னுடைய டீமிற்கு அஜித் பிரியாணி சமைத்த வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனிடையே அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது மீண்டும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. விடாமுயற்சி படத்தின் சூட்டின் விரைவில் துவங்கி படம் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X