இணையும் அஜித், பிரசாந்த் நீல்.. தரமான சம்பவம் ரெடி.. வெயிட்டிங்கில் வெறியாகும் அஜித் ரசிகர்கள்!

ஹைதராபாத்: நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு தீபாவளிக்கும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் பிரச்சாந்த் நீல் ஆகியோர் சந்திப்பு நடைபெற்றதாக பேச்சுகள் அடிப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரது சந்திப்பு குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் சினிமா உலகில் வலம் வருகின்றது.

அவ்வகையில், நடிகர் அஜித் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். அங்கேயே குட் பேட் அக்லி படப்பிடிப்பும் நடை பெறுவதால், குட் பேட் அக்லி குறித்த தகவல்களை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடிகர் அஜித்தை இயக்குநர் பிரசாந்த் நீல் சந்தித்துள்ளாராம். மேலும் அந்த சந்திப்பில் இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். அப்போது, இருவரும் இணைந்து விரைவில் படம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் பேச்சுகள் கோலிவுட்டில் மட்டும் இல்லாமல், கன்னட சினிமா உலகமான சாண்டில் வுட்டிலிம் பேச்சுகள் காட்டூத் தீ போல பரவியது.

Ajithkumar Prasanth Neel

குறிப்பாக இருவரும் இணைந்து கே.ஜி.எஃப். 3 படத்தில் பணியாற்றவுள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக யாஷ் கதாபாத்திரத்தை விடவும் ஒரு மாஸான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகத்தான் அஜித்தை பிரசாந்த் நீல் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அஜித் மற்றும் பிரசாந்த் நீல்க்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்கள் இதனை மறுத்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Ajithkumar Prasanth Neel

சந்திப்பு : ஏனென்றால், பிரசாந்த் நீல் மற்றும் அஜித் சந்திப்பு என்ற தகவல் வெளியானதும், அஜித் ரசிகர்கள் கே.ஜி.எஃப் 3 படத்தின் போஸ்டரை தாங்களாகவே உருவாக்கி, அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர். ஒரு சில இடங்களில் பேனர் வைக்கவும் செய்தனர். இதுமட்டும் இல்லாமல், அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை வந்த போது, ரசிகர் ஒருவர் கே.ஜி.எஃப் 3 படத்துல நடிங்க அண்ணா என உரக்கச் சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Ajithkumar Prasanth Neel

கே.ஜி.எஃப் 3: இந்நிலையில், அஜித் மற்றும் பிரசாந்த் நீல் சந்திப்பு தொடர்பான புதிய தகவல் சினிமா உலகில் வேகமாக பரவி வருகின்றது. அதில், " இருவரும் இணைந்து படம் செய்வது உறுதி. ஆனால் அது கே.ஜி.எஃப் 3 இல்லை. அஜித்தின் கைவசம் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர், அஜித் சுமார் 6 மாத காலம் ஓய்வு எடுக்கவுள்ளார்.

Ajithkumar Prasanth Neel

ஓய்வு: அதாவது வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது, அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் குறைந்தபட்சம் 6 மாத காலம் ஓய்வு எடுக்கவுள்ளார். அதன் பின்னர் சிறுத்தை சிவா படத்தில் நடிக்கவுள்ளார் எனவும், அந்த படம் முடிந்த பின்னர்தான், அஜித், பிரசாந்த் நீல் படத்தில் நடிக்கவுள்ளார் என இப்போது தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. கே.ஜி.எஃப் போன்ற பேன் இந்தியா படத்தினை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அஜித் இணைந்தால் அந்த படத்தின் தரம் உலகத்தரத்திற்கு இருக்கும் என பேச்சுகள் அதிகமாகியுள்ளது.

Ajithkumar Prasanth Neel

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X