தள்ளிப்போக வாய்ப்பே இல்லை; ஏ.கே. ஃபேன்ஸ் தயாரா இருங்க.. இந்த தீபாவளி விடாமுயற்சியோடு தான்!

By MohanRaj

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் தனக்காக கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் அஜித் குமாரின் பெயர் எப்போதும் இருக்கும். நெகடிவ் ரோல்களைத் தேர்வு செய்து அதில் ஹீரோயிசம் காட்டும் கதாநாயகன் யார் என்றால் அது தமிழ் சினிமாவில் அஜித் குமார் மட்டும்தான். தான் ஒப்புக்கொண்ட படத்திற்காக தனக்கு எலும்பு முறிவு ஏற்படும் எனத் தெரிந்தும், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்க அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும், ரிஸ்க்கான முடிவுகளை எடுத்து நடிக்கும் அஜித் குமாரை மைய்யப்படுத்தி இன்றைக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம் தமிழ் சினிமாவில் நடைபெற்று வருகின்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சுமார் ரூ. 250 கோடி வரை தியேட்டரில் வசூல் செய்தது.

Vidamuyarchi Diwali Release Good Bad Ugly AK Trisha Anirudh

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்

வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்திற்கு கமிட்டாகும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஆனால் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கம் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

Vidamuyarchi Diwali Release Good Bad Ugly AK Trisha Anirudh

விடாமுயற்சி சூட்டிங்

இதில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்றுடன் அதாவது ஜூன் மாதம் ஏழாம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல உள்ளார் அஜித்குமார். விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து 40 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதியிலிருந்து அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் குமாருடன் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் படத்தை மிக விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜர்பைஜானில் அதிரடி சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இந்த தகவல் விடாமுயற்சி குறித்து எந்த அப்டேட்டும் வரமால் இருந்ததால் சோகத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Vidamuyarchi Diwali Release Good Bad Ugly AK Trisha Anirudh

விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் குமார் ஜப்பான் சென்று குட் பேட் அக்லி படக்குழுவினருடன் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக சமீபத்தில் மலையாளத்திலும் அதன்பின்னர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்ட பிரேமலோ படத்தில் கதாநாயகன் நஸ்லன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அஜித்தின் மகன் கதாபாத்திரத்திற்கு அவரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Vidamuyarchi Diwali Release Good Bad Ugly AK Trisha Anirudh

தீபாவளி - பொங்கல் இறங்கி அடிக்கும் அஜித்

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் ஓய்வில்லாமல் நடித்து வரும் அஜித்குமார் வரும் தீபாவளிக்கும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயாராகவே இருக்கின்றார். தீபாவளிக்கு விடாமுயற்சியும் பொங்கலுக்கு குட் பேட் அக்லியும் ரிலீசாகவுள்ளதால், அஜித் குமாரின் ரசிகர்கள், தீபாவளியும் எங்களதுதான் பொங்கலும் எங்களதுதான் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.

இதுமட்டும் இல்லாமல் அஜித் தனது அடுத்த படத்தில் நடிப்பது தொடர்பாகவும் யோசித்து வருகின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ஷங்கரின் பெயரும் இயக்குநர் ஹெச். வினோத் பெயரும் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X