Ajithkumar: 234 கி.மீ வேகத்தில் பறக்கும் அஜித்குமார்.. அசால்ட்டாக ஒற்றைக் கையில் கார் ஓட்டுறாரே!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வேலை பார்க்கின்றார் அஜித் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்பட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.

ajithkumar ajithkumar car drive vidaamuyarchi 234

பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தையக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

234 கி.மீ வேகம்: இந்நிலையில், அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்திற்குச் செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே வீடியோவில் கார் செல்லும் வேகத்தை நோட் செய்யச் சொல்கின்றார். மேலும் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தமிழ் நாட்டிலே அல்லது இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியிலோ எடுத்தது அல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

இந்தியாவில் இல்லை: காரணம் அஜித்குமார் காரின் இடது பக்கத்தில் அமர்ந்து காரினை இயக்குகின்றார். இந்தியாவில் காரின் இடது புறத்தில் ஸ்டேரிங் இருக்கும் கார்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. எனவே இந்த வீடியோ அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றபோதுதான் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

யோகி பாபு, அஜித்: நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு டீமிற்கும் இடையில் பிரச்னை ஒன்று உருவாகியுள்ளது. இது தொடர்பாக வலை பேச்சு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பல வருடங்களுக்கு முன்னர் யோகி பாபு படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ஒருவரைத் தொட, அந்த நடிகரோ 'டோன்ட் டச் மி' எனக் கூறிவிட்டதாகவும், இதனால் யோகி பாபு மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானதாகவும் கூறினர். இந்நிலையில் இன்றைய வீடியோவில், யோகி பாபுவிடம் டோன்ட் டச் மி எனக் கூறியது நடிகர் அஜித்குமார் என்றும், நடிகர் யோகி பாபு கூறிதான் இந்த விஷயத்தை நாங்கள் கூறினோம் என்றும் கூறியுள்ளனர். இவர்களின் இந்த பேச்சு திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் அஜித்குமார், யோகி பாபுவிடம் தீண்டாமையைக் கடைபிடித்தாரா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விஷயம் தீயாக பரவிவரும் நேரத்தில் அஜித்குமார் 234 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X