சென்னை ஏர்போர்ட்டில் அஜித்! ரசிகர் சொன்ன அந்த வார்த்தை! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!
சென்னை: நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதாவது ஜூலை 25ஆம் தேதி சென்னைகுத் திரும்பினார். நடிகர் அஜித் சென்னையை வந்தடைந்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு காரில் செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். அஜித் காரில் ஏறும்போது ரசிகர் ஒருவர் அண்ணா கே.ஜி.எஃப் 3 படத்துல நடிங்க அண்ணா எனக் கூறுகின்றார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகின்றது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பினை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்திட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த மாதம் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஜப்பானில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கர்நாடக சினிமா மீது கவனம் செலுத்த வைத்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படமான சலார் படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால் இவரது கவனம் மீண்டும் கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தின் மீது விழுந்திருப்பதாக கூறப்படுகின்றது.
கே.ஜி.எஃபில் அஜித்: இந்நிலையில் நடிகர் அஜித்தை கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜித்தை அணுகியதாகவும், அதற்கு அஜித் தரப்பில் இருந்தும் ஓ.கே சொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது மட்டும் இல்லாமல், கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்திற்குப் பின்னர் அஜித்தை வைத்து பிரசாந்த் நீல் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் உலாவந்தது. இது தொடர்பாக செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியாக தகவல் காட்டுத்தீ போல பரவியது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்: குறிப்பாக அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். பிரசாந்த் நீல் படத்தில் அஜித் நடிக்கின்றார் என்றால் கட்டாயம் அது கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என ஆளாளுக்கு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர் என்றே கூறலாம். ஆனால் இந்த தகவல் பொய் என்று நேற்றே நமது ஃபிலிமீ பீட் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
ரசிகர் சொன்ன அந்த வார்த்தை: நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதாவது ஜூலை 25ஆம் தேதி சென்னைகுத் திரும்பினார். நடிகர் அஜித் சென்னையை வந்தடைந்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு காரில் செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களையும் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். அஜித் காரில் ஏறும்போது ரசிகர் ஒருவர் அண்ணா கே.ஜி.எஃப் 3 படத்துல நடிங்க அண்ணா எனக் கூறுகின்றார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











