Ajithkumar: அஜித்தே.. கடவுளே.. அதிர்ந்த சென்னை மெட்ரோ.. எங்க பார்த்தாலும் இவங்க அலப்பற தாங்கல!
சென்னை: நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த அஜித் ரசிகர்கள் "அஜித்தே கடவுளே" என கோஷமிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டு ரசிகர்கள் எனது படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள். முதலில் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என ஒரே அறிக்கையில் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த அஜித் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுத்து வருகின்றார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி இந்த ஆண்டுக்குள்ளும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது.

அஜித் என்னதான் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்தி வந்தாலும், அஜித் ரசிகர்கள் அவர்மீது இருக்கும் அதீத அன்பினால் பல்வேறு குறும்புத்தனங்களைச் செய்து வருகின்றனர் என்றே கூறலாம். நடிகர் அஜித் தொடக்கத்தில் காதல் மன்னன் என அழைக்கப்பட்டார். அதன் பின்னர் தல என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்பட்டார். ஒருகட்டத்தில் தனக்கு அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம் எனத் தெரிவித்தார். உடனே அவரை ரசிகர்கள் தல என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தல எனவும் அழைக்க வேண்டாம் எனக் கூறினார். இப்போது படங்களில் அஜித்குமார் என மட்டுமே பெயர் வருகின்றது.
அஜித்தே கடவுளே: ஆனால் அஜித் ரசிகர்கள் அவரை எதாவது பட்டப்பெயருடனே அழைத்து பழகிவிட்டதால் தற்போது அஜித்குமாரை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம். அதாவது அஜித் ரசிகர்கள் தற்போது அஜித்தை எங்கு கொண்டாடினாலும், அஜித்தே கடவுளே என கூட்டமாக கூச்சலிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று அதாவது அக்டோபர் 6ஆம் தேதி இந்திய விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைனைக் காண லட்சகணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

அலப்பறை: நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சென்னை மெட்ரோவில் சென்ற பொதுமக்களில் அஜித் ரசிகர்கள் இருந்ததால், அவர்கள், ' அஜித்தே கடவுளே' என தொடர்ந்து கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த சிலர் , எங்க போனாலும் இந்த அஜித் ரசிகர்கள் அலப்பறை தாங்கல எனவும், பொதுமக்கள் பயணிக்கும் மெட்ரோவில் இதுபோல் கத்துவது தவறான செயல் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போதுகூட இதுபோல அஜித் ரசிகர்கள் கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











