சமூக வலைதளங்களில் வெளியான அஜித்தின் புதிய வீடியோ.. நேர்கொண்ட பார்வை பட லுக் மாதிரியே இருக்கே!

சென்னை : நடிகர் அஜித் தற்போது தனது ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக்கிற்கு விரைவில் படக்குழு செல்லவுள்ளது. அங்கு தொடர்ந்து 3 வாரங்கள் சூட்டிங் நடத்தப்பட உள்ளன.

துணிவு படம்

துணிவு படம்

நடிகர் அஜித், தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் துணிவு. இந்தப் படம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூட்டிங் துவங்கப்பட்டது.

பாங்காக்கில் சூட்டிங்

பாங்காக்கில் சூட்டிங்

ஏகே 61 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், விரைவில் படக்குழு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பாங்காக் செல்லவுள்ளது. அங்கு தொடர்ந்து 3 வாரங்கள் சூட்டிங் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து படத்தின் சூட்டிங் விரைவில் முடிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி நெருக்கடியால் சூட்டிங் பாதிப்பு

நிதி நெருக்கடியால் சூட்டிங் பாதிப்பு

இந்தப் படம் முன்னதாக தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்படாமல் இடையிடையில் பாதிக்கப்பட்டது. நிதி நெருக்கடி காரணமாகவே படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கிடைத்த சிறிய இடைவேளைகளில் பிரிட்டன், லடாக் என்று அஜித், தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

பைக் சுற்றுப்பயணம்

பைக் சுற்றுப்பயணம்

இந்த சுற்றுப்பயணத்தின் இடையில், தனது உலக பைக் சுற்றுப்பயணத்தினையும் மேற்கொண்டார். அதுபோல சமீபத்தில் லடாக், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களில் இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் சென்னை திரும்பினார். தொடர்ந்து பாங்காக் சூட்டிங்கிலும் பங்கேற்கவுள்ளார்.

அஜித்தின் புதிய வீடியோ

அஜித்தின் புதிய வீடியோ

இதனிடையே லடாக்கில் இருந்தபோது எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நீண்ட வெள்ளை தாடி, தலையில் குளிருக்காக போடப்படும் குல்லா, கண்களில் கூலர்ஸ் சகிதம் இந்த வீடியோவில் அஜித் காணப்டுகிறார். எதிரில் இருப்பவர் எதையோ கூற, அதற்கு அழகான புன்னகையையும் பரிசளிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் லுக் போலவே இந்த வீடியோவில் அஜித் காணப்படுவதாகவும் கமெண்ட் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X