Ajith: ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு.. விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு இயக்குநரை பாராட்டிய அஜித்!
சென்னை: நடிகர் அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் சூட்டிங்கும் ஐதராபாத்தில் நடந்துவரும் சூழலில் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில், படத்தை தீபாவளி ரிலீசாக கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றனர். ஆயினும் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டில் பொங்கல் ரிலீசாக துணிவு படம் வெளியானது. படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த மே மாதத்தில் அவரது அடுத்தப்படமான விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலும் உடனடியாக சூட்டிங் துவங்கப்படவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது. இதனிடையே தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து சில மாதங்கள் முடங்கியது. இதையடுத்து கடந்த மாதத்தில் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விடாமுயற்சி பட போஸ்டர்கள்: தற்போது ஒரேநேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங்கில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். முன்னதாக அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் இவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டனர். இதனிடையே இன்றைய தினம் படத்தின் மற்றொரு நடிகரான நிகில் நாயரின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

தள்ளிப் போகும் ரிலீஸ்?: இந்தப் போஸ்டர்கள் அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. படத்தை தீபாவளி ரிலீசாக வெளியிட உள்ளதாக முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. அதற்கான முயற்சியாக ஒரு பக்கம் படத்தின் சூட்டிங்கும் மறுபக்கம் படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் துரிதப்பட்டிருந்தன. ஆனால் படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி நிறைவடையாத நிலையில், படம் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக குட் பேட் அக்லி படமும் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனியை பாராட்டிய அஜித்: ரோட் ட்ராவலை மையமாக கொண்டு விடாமுயற்சி படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில், இந்தப் படத்தின் எடிட் செய்யப்பட்ட பகுதிகளை சில தினங்களுக்கு முன்பு பார்த்த நடிகர் அஜித்குமார், காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளதாக மகிழ் திருமேனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டியதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











