Ajithkumar: துபாயில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்.. அஜித்தை நெகிழ வைத்த ரசிகர்!
துபாய்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள விடாமுயற்சி படத்தின் பிரமோஷன்களில் இயக்குநர் மகழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக விடாமுயற்சி படத்தின் பாடல் வெளியாகி அஜித் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியது. இந்நிலையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்துள்ளார் அஜித். தற்போது தன்னுடைய கார் ரேசிங் பயிற்சிகளுக்காக துபாயில் முகாமிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இந்த ரேசிங்கில் அவரது அணி வெற்றி பெற்றதை பார்க்க முடிந்தது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன. கடந்த ஆண்டின் இறுதியிலேயே இந்த படங்களின் சூட்டிங் மட்டும் இல்லாமல் டப்பிங் வேலைகளையும் நிறைவு செய்துவிட்டார் அஜித்குமார். இதை நிறைவு செய்துவிட்டே அவர் துபாயில் நடைபெற்ற ரேசிங் பயிற்சிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது இதையொட்டி அவர் துபாயிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார். முன்னதாக இந்த ரேஸிங்கின் பயிற்சியின்போது அஜித்திற்கு விபத்து ஏற்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனாலும் அவர் தைரியமாக தன்னுடைய அணியை முன்னெடுத்தார்.
அஜித் அணி வெற்றி: அவரது அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு மாதவன் உள்ளிட்ட நடிகர்கள் ஸ்பாட்டிலேயே உற்சாகத்தை கொடுத்ததை பார்க்க முடிந்தது. மேலும் அஜித்தின் ரசிகர்களும் ஏராளமானோர் ரேஸ் நடந்த இடத்தில் குவிந்திருந்தனர். இதையடுத்து தங்களின் எதிர்காலத்தில் கவனத்தை செலுத்துமாறு அஜித் தன்னுடைய ரசிகர்களை கேட்டுக் கொண்டார். தன்னுடைய ரசிகர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வரும் அஜித்குமார். தொடர்ந்து அவர்கள் தங்களது வாழ்க்கை மீதும் குடும்பத்தினர் மீதும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ரசிகர்களுடன் கொண்டாட்டம்: இந்நிலையில் துபாயில் இருக்கும் அஜித், தன்னுடைய ரசிகர்களுடன் மாலைப்பொழுதை கழித்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த புகைப்படங்களில் ஸ்மார்ட்டான அஜித்தை பார்க்க முடிகிறது. இந்நிலையில் அஜித்தின் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் பட பாடலை ரசிகர் ஒருவர் அவருக்கு பாடி காட்டியதையும் அதன் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளன. அஜித் முன்னிலையில் அந்த ரசிகர் மிகவும் அழகாகவும் உணர்ச்சி வசமாகவும் பாடியதை அஜித் மிகுந்த உற்சாக மனநிலையில் என்ஜாய் செய்ததையும் பார்க்க முடிந்தது.
அஜித்தின் அடுத்தப்படம்?: தன்னுடைய ரேசிங்கில் அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் அஜித், தொடர்ந்து சில மாதங்கள் அதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் வித்தியாசமான ஜானர்களில் ரிலீசாகவுள்ள நிலையில், அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











