Ajith kumar: சுவிட்சர்லாந்தில் அஜித் சுற்றுலா கொண்டாட்டம்.. சார் விடாமுயற்சி அப்டேட் இன்னும் வரல!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார்.

லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் டைட்டில் மற்றும் அறிவிப்பு கடந்த மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது.

அதுமுதல் இந்தப் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வரும் ஆகஸ்ட் மாதத்தில் சூட்டிங் துவங்கும் என்று நம்பப்படுகிறது.

Actor Ajithkumar is in Switzerland and taking many photos with his fans

சுவிட்சர்லாந்தில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் இந்த ஆண்டின் அதிகப்படியான கலெக்ஷனை ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது ஏகே62 படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து ஏகே62 படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்கள் தாமதத்தை தொடர்ந்து கடந்த மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டது. மேலும் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி இன்னும் பெயரளவிலேயே உள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய மூன்று மாதங்களாக அறிவிப்புடனேயே நின்றுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதமாவது படத்தின் சூட்டிங் துவங்குமா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய பைக் டூர் உள்ளிட்டவற்றில் அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் விடுமுறை கொண்டாட்டத்தில் அஜித் உள்ளார். குடும்பத்தினர் இல்லாமல் அவர் தனியாக இந்த சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் விமான நிலையம் மற்றும் சுவிட்சர்லாந்து சாலைகளில் அவர் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த போட்டோஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது அவர் சற்றே ஸ்லிம்மாகி ஸ்மார்ட்டாக காணப்படுகிறார். இந்த மாற்றமும் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Actor Ajithkumar is in Switzerland and taking many photos with his fans

தன்னுடைய பைக் பயணங்கள் உள்ளிட்டவற்றில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார் அஜித். விடாமுயற்சி படத்தை முடித்துக் கொடுத்து, நடிப்பிற்கு இடைவெளி விட்டுவிட்டு பைக் பயணங்களில் தீவிரமாக அவர் ஈடுபட உள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. அவருடைய விருப்பம் என்பது முக்கியமானதாக இருந்தாலும் அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தும்வகையில் அவ்வப்போது அவர் படங்களை கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாலினி அஜித், தன்னுடைய மகன் ஆத்விக் மற்றும் மகள் அனொஷ்காவுடன் ஓபன்ஹெய்மர் படத்தை பிரபல திரையரங்கில் சென்று பார்த்தார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகின. இவர்களுடன் அஜித்தும் வந்துள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் அஜித் சுவிட்சர்லாந்தில் விடுமுறை கொண்டாட்டத்தில்தான் இருந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X