Ajithkumar: மாதவன் வீட்டில் அஜித்குமார்.. எல்லாம் சந்தோஷமான விஷயம்தான்.. விவரத்தைப் பாருங்க!
துபாய்: நடிகர் மாதவனுக்கு துபாயிலும் வீடு உள்ளது. அங்கு அவர் தனது ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் ஜாலியாக இருப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் தனது சொந்த வீட்டினை எப்படி பராமரிக்கின்றாரோ, அதேபோல் துபாயில் உள்ள வீட்டினையும் மிகவும் கண்ணும் கருத்துமாக பாதுகாத்தும் பராமரித்தும் வருகின்றார். இந்நிலையில், அவர் தனது துபாய் வீட்டில் ஒரு விஷேஷ ஏற்பாடு செய்ய, அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் மாதவன் மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது. அதேபோல் இவர்களின் குடும்பங்களுக்கு இடையிலும் நட்புறவு உள்ளது. அஜித்குமாரின் மனைவி ஷாலினி மற்றும் மாதவன் இணைந்து அலைபாயுதே படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பெறும் வெற்றிப்படமாக மாறியதுடன், இன்றைக்கும் காதலர்களுக்கு விருப்பமான படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் மூலம் கிடைத்த அறிமுகத்தால் மாதவன் - ஷாலினி என இவர்களுக்கு இடையிலும் நல்ல நட்புறவு உள்ளது.

அஜித்தின் குடும்ப நிகழ்வுகளில் மாதவன் தனது குடும்பத்துடன் கலந்து கொளவது, மாதவனின் குடும்ப நிகழ்வுகளில் அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வது என இரண்டு குடும்பங்களுமே மிகவும் நெருக்கமான குடும்பங்களாக உள்ளது. இந்நிலையில்தான் மாதவன் தனது வீட்டில் ஏற்பாடு செய்த விசேஷத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.

அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரைப் பொறுத்தவரையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். அதாவது, படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகள், வெற்றி விழாக்கள், விருது விழாக்கள் என எவற்றிலும் பங்கேற்க மாட்டார். அதனை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் தனது நண்பர்கள் தன்னை அழைத்தால், அவர்களின் வீட்டு விஷேசங்களில் தவறாமல் கலந்து கொள்வார். சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்திய கிரிக்கெட் வீரர் நட்ராஜனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.

கார் ரேஸ்: தற்போது அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். மேலும், ஐரோப்பிய கார் பந்தயமான ஜிடி3 கார் பந்தையத்திலும் கலந்து கொள்ள, தனது பெயரில் தனி அணியை உருவாக்கியுள்ளார். மேலும் தீவிரமான பயிற்சியிலும் தனது அணியினருடன் ஈடுபட்டு வருகின்றார். இந்த பயிற்சியை அவர் அபுதாபியில் மேற்கொண்டு வருகின்றார்.

தீபாவளி: இந்நிலையில்தான் அவரை நடிகர் மாதவன் தனது வீட்டில் நடைபெறவுள்ள தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். மாதவனின் அழைப்பினை ஏற்ற நடிகர் அஜித்குமார், விழாவில் பங்கெடுத்துள்ளார். இந்த விழாவில் மாதவனின் குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவை மாதவனின் மனைவி சரிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவின் மூலம்தான் அஜித், மாதவன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.



Click it and Unblock the Notifications











