அவர் வந்து போன பின்! அஜித் உடனான சந்திப்பு குறித்து இந்திய அயலுறவு பணி அதிகாரி பயணி தரண் நெகிழ்ச்சி!
அஜர்பைஜான்: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பினை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்திட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த மாதம் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜப்பானில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த 25ஆம் தேதி சென்னைகுத் திரும்பினார். நடிகர் அஜித் சென்னையை வந்தடைந்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு காரில் செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களையும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்தனர்.

இப்படியான நிலையில், அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் தன்னுடன் படத்தில் நடிக்கும் ஆரவ் மற்றும் நிக்கில் ஆகியோருடன் இந்திய அயலுறவு பணி அதிகாரி பயணி தரண் வீட்டிற்குச் சென்றுள்ளார். இது தொடர்பாக இந்திய அயலுறவு பணி அதிகாரி பயணி தரண் தனது எக்ஸ் பக்கத்தில், அஜித் தனது வீட்டிற்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து அஜித் தனது வீட்டிற்கு வந்தது தொடர்பாக எழுதியும் உள்ளார்.

அதில், "நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.

நள்ளிரவு கடந்தும்: இனிய மாலை. ஒரு கைவிரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் அஜித்தின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், 'அஜித் என்பவர் ஒரு நடிகர்' என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கிவிடமுடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்துகொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்.

பைக், கார்: எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின்போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது. ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்துபார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும் மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.

அஜித் விடைபெற்றுச் சென்றபிறகு பல சிந்தனைகள்.
மனிதர்கள் ஏன் பல விஷயங்களைச் செய்கிறார்கள்? அவர்களது ஊக்கம் எதைப் பற்றியது? இவற்றிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?
என் பதில்: ஆர்வத்தால் செய்யும் காரியங்களுக்குத் திடமான பலன்கள் எதுவும் தேவையில்லை.
ஒரு விஷயத்தை முயன்றுபார்த்து அனுபவித்திருக்கிறோம் என்பது போதாதா? கடைசியில் அதையும் மீறி எந்த விஷயத்தில் என்ன கிடைத்துவிடுகிறது? அவ்வளவு தான் வாழ்க்கை: அனுபவம். #பயணிதரன் #வாழ்வெனும்பயணம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அயலுறவு பணி அதிகாரி பயணி தரணின் இந்த பதிவுக்கு பலரும் லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











