Ajith kumar: பேமிலியை பாருங்க.. சண்டை போடாதீங்க.. ரசிகர்களுக்கு அஜித் வைத்த கோரிக்கை!

செனனை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இம்மாதம் இறுதியில் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படம் பொங்கல் ரேஸில் பங்கேற்கவிருந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கியது.

இந்நிலையில் குட் பேட் அக்லி படமும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் வேலைகளை அடுத்தடுத்து முடித்துக் கொடுத்துள்ள அஜித்குமார் தற்போது துபாயில் நடக்கவுள்ள ரேஸிங்கில் பங்கேற்பதற்காக அவர் அடுத்தடுத்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ajith kumar vidaa muyarchi

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகவுள்ளன. இதில் பொங்கல் ரேஸில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படம் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகியது. இதையடுத்து இந்தப் படம் இம்மாதம் இறுதியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதன் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் துணிவு படம் ரிலீசாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாவது ரசிகர்களை கொண்டாட்ட மோடில் வைத்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: இந்த இரு படங்கள் சூட்டிங், டப்பிங் என அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்ட அஜித், துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். முன்னதாக சிங்கப்பூரில் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர் தான் மட்டும் துபாய் சென்ற நிலையில், ஷாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் ரேஸிங்கிற்காக அடுத்தடுத்த பயிற்சிகளில் அஜித் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அஜித்தின் ரேஸிங் கார் விபத்தில் சிக்கியது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால் மறுநாளே மீண்டும் அஜித் பயிற்சியில் ஈடுபட்டார்.

துபாயில் அஜித்குமார்: இந்நிலையில் துபாய் 24H கார் பந்தய ரேஸில் இருந்து அஜித்குமார் விலகியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது அவரது கார் விபத்திற்குள்ளானதால் ஒரு போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளதாகவும் ஆனால் Porsche GT4 போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடந்த கார் பந்தயம் நடந்த இடத்திற்கு அஜித் வந்த நிலையில் அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவரை பார்த்து தல என்று அவர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். அஜித்தும் அவர்களை பார்த்து கையசைத்ததை பார்க்க முடிந்தது.

அஜித்குமார் கோரிக்கை: இந்நிலையில் அஜித் கொடுத்துள்ள பேட்டியொன்றில் தன்னுடைய வாழ்க்கையின் பேஷனாக ரேஸிங் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்தது தன்னை எமோஷனலாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு தான் கூற வேண்டிய விஷயம் ஒன்று உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ தான் கடவுளை வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பேமிலியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நன்றாக படித்து, வேலைக்கு செல்பவர்கள் அதில் கவனம் செலுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சண்டை வேண்டாம் என வேண்டுகோள்: நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும்போது தோல்வி ஏற்பட்டால் சோர்ந்துவிட வேண்டாம் என்று கூறியுள்ளார் அஜித். ரேஸிங் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ள அஜித், திரைத்துறையை போலவே இந்தத் துறையிலும் அனைவருடைய டீம் வொர்க் பிரதானம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் இந்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மீண்டும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X