தாய்லாந்திலிருந்து சென்னை திரும்பிய அஜித்.. விமானநிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். பாங்காக்கில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து தாய்லாந்தில் தனது வேர்ல்ட் டூரின் ஒரு பகுதியை மேற்கொண்டார் அஜித். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தன்னுடைய படத்தில் வெளியாகும் ஒரு டயலாக்கை போல தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தானே செதுக்கியுள்ளார். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் ஒவ்வொரு அடியையும் கவனமாக மேற்கொண்டு தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக மாறியுள்ளார்.

துணிவு படத்தின் சூட்டிங்
இவரது நடிப்பில் தற்போது ஏகே 61 படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இந்த சூட்டிங் தற்போது சென்னை மவுண்ட்ரோடில் நேற்றைய தினம் முதல் துவங்கியுள்ளது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறையவடைந்துள்ள நிலையில் சில பேட்ச் வொர்க் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மவுண்ட்ரோடில் சூட்டிங்
நேற்றைய தினம் மவுண்ட்ரோடில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங்கில் படத்தின் நாயகி மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இந்தப் படப்பிடிப்பில் அஜித்தும் பங்கேற்றுள்ளதாக வெளியான தகவலையடுத்து ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சூட்டிங்கில் அஜித் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்னர்.

தாய்லாந்தில் அஜித் வேர்ல்ட் பைக் டூர்
கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் பாங்காக்கில் நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சூட்டிங்கை நிறைவு செய்துக்கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பினர். ஆனால் நடிகர் அஜித் தாய்லாந்தில் தனது வேர்ல்ட் பைக் டூரை தொடர்ந்தார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

சென்னை திரும்பிய அஜித்
இதனிடையே இன்றைய தினம் நடிகர் அஜித் தாய்லாந்திலிருந்து நாடு திரும்பியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் அவரது வருகையையொட்டி ஏராளமான ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சூட்டிங்கில் அஜித் இணைவாரா?
நேற்றைய தினம் மவுண்ட்ரோடில் நடத்தப்பட்ட அஜித்தின் துணிவு படத்தில் அஜித்திற்கு பதிலாக டூப் போடப்பட்டு படத்தின் சூட்டிங்கை இயக்குநர் ஹெச் வினோத் நடத்தியுள்ளார். இதனிடையே, இன்று நடைபெறவுள்ள சூட்டிங்கில் அஜித் பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் மவுண்ட்ரோடு செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











