Ajithkumar : சந்தோஷ் நாராயணனிடம் மன்னிப்பு கேட்ட அஜித்குமார்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். அஜித்குமார் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், ரேஸ் கார்கள் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். தான் நடிக்கும் படங்களின் புரோமோசனில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை. இது திரைத்துறையில் ஒரு தரப்பினரை அப்செட் செய்தாலும், அஜித்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பு கம்பெனிகள் தயாராகவே உள்ளது. அஜித் படங்களில் நடிக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், அல்லது அவர் வெளியில் அவரது சொந்த வேலைகளுக்காக பொது இடங்களுக்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகும் தினங்களில் அஜித் தான் டாக் ஆஃப் த டே.

அஜித்குமார் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள, விமான நிலையத்திற்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவரது ரீசெண்ட் க்ளிக்ஸ் என இணையத்தில் வைரலாகின்றது. சென்னை விமானநிலையத்தில் அவரைப் பார்க்கும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வர். அதேபோல் சமீபத்தில் கூட நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் என இருவரும் அஜித்குமாரை சென்னை விமான நிலையத்தில் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் அஜித்குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

ajithkumar santhosh narayanan good bad ugly

இது இணையத்தில் தாறுமாறாக ட்ரெண்ட் ஆனது. இப்படியான நிலையில், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் அளித்த பேட்டி ஒன்றில், அஜித்குமாரை சந்தித்தது தொடர்பாக பகிர்ந்து கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, " ஒருமுறை நான் அஜித் சாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். நான் யாரென்றே தெரியாமல் என்னிடம் 5 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு பொதுவாகவே நான் யாரென்று கூறிக்கொள்ளும் பழக்கம் கிடையாது. அவருக்கும் நான் யாரென்று தெரியாததால், என்ன செய்து கொண்டு இருக்கீங்க எனக் கேட்டார். அப்போது நான், மியூசிக் செய்துகொண்டு இருக்கின்றேன் எனக் கூறினேன்.

ajithkumar santhosh narayanan good bad ugly

சந்தோஷ் நாராயணன்: உடனே அவர், நல்லா பண்ணுங்க, நல்லா வருவீங்க, சீக்கிரமே நல்லா வருவீங்க எனக் கூறினார். எனக்கு எப்படி என்னுடைய பெயர், நான் செய்து கொண்டு இருக்கும் வேலை குறித்து சொல்லத் தோனவில்லையோ, அஜித் சாரும் என்னிடம் அப்படியான தகுதிகள் எதுவும் எதிர்பார்க்காமல் பேசினார். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும்போது, எனது மனைவி மீனாட்சி ஓடிவந்து, " இவரு பேசு சந்தோஷ் நாராயணன். இவரு இதுபோன்ற படங்கள் எல்லாம் செய்துள்ளார்" எனக் கூறினார்.

ajithkumar santhosh narayanan good bad ugly

மன்னிப்பு கேட்ட அஜித்: எனது மனைவி இதைக் கூறியதும், அஜித் சார் என்னை தனியே கூட்டிக் கொண்டு சென்று 'ரொம்ப சாரிங்க' எனச் சொன்னார்" என சந்தோஷ் நாராயணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணன் யாரென்று தெரியாமல், அவர் தன்னிடம் பேசுகின்றார் என அவரை மதித்து பேசிய அஜித்குமார், அவர் யாரென தெரிந்த பின்னர் மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ajithkumar santhosh narayanan good bad ugly

அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி இந்த ஆண்டும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டும் வெளியாகவுள்ளது என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X