Ajithkumar - அவரிடம் நான் அதை கற்றுக்கொண்டேன்.. ஷாருக் பற்றி அஜித்குமார் ஷேரிங்ஸ்

சென்னை: Ajithkumar (அஜித்குமார்) ஷாருக்கானை பற்றி அஜித்குமார் மனம் திறந்து பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த பிறகும் அவருக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

Actor Ajithkumar Shares Experience About Sharukh Khan And Ashoka Movie

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையே பெற்றது. அதன் காரணமாக அஜித் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். துணிவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். முதலில் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் வெளியேற மகிழ் திருமேனி படத்துக்குள் வந்தார்.

விடாமுயற்சி: அதன்படி மகிழ் திருமேனி இயக்கும் அஜித்தின் 62ஆவது படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும் ஷூட்டிங் அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் நடந்து முடிந்திருக்கிறது. மேலும் அடுத்த ஷெட்யூல் சென்னை, அபுதாபியில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

ஹிந்தியில் அஜித்: அஜித்குமார் இந்தப் படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் தகவல்கள் உலாவுகின்றன. இதற்கிடையே அஜித் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இயக்கிய அசோகா படத்தில் ஷாருக்கானுடன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஷாருக்கிடம் கற்றுக்கொண்டது: இந்நிலையில் அசோகா படத்தில் நடித்தது குறித்து அஜித் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "நடிகர் ஷாருக்கானை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவருடன் நடிப்பது நல்ல அனுபவத்தை தரும் என்று நம்பினேன். அதேநேரம் அசோகாவில் அனுபவத்தை தாண்டி ஷாருக்கானிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

அவர் எவ்வளவு பெரிய ஸ்டார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது காட்சி முடிந்துவிட்டாலும் மற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்துகொண்டிருப்பார். அது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அவர் சுறுசுறுப்பாக இருந்ததால் மொத்த யூனிட்டுமே அப்படி இயங்கியது. இந்த விஷயத்தை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X