Ajithkumar :முக்திநாத்தில் சாமி தரிசனம் செய்த அஜித்.. ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை : நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைகா நிறுவனத்திற்காக மகிழ்திருமேனி இயக்கத்தில் தன்னுடைய ஏகே62 படத்தில் இணையவுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது அஜித் நேபாளத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இம்மாத இறுதிவரை அவர் இந்த பயணத்தை தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.

Actor Ajithkumar spotted at Nepals Muktinath temple

முக்திநாத் கோயிலில் அஜித் சாமி தரிசனம் : நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான துணிவு படம் அவரை ஏமாற்றவில்லை. முந்தைய நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துணிவு படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் படத்தின் வசூல் தாறுமாறாக அமைந்தது. படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தன்னுடைய ஸ்டைலில் சிறப்பாக கொடுத்திருந்தார் அஜித்.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ஏகே62 படத்திற்காக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த படம் நடக்கவில்லை. மாறாக, மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அஜித் பிறந்தநாளில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Ajithkumar spotted at Nepals Muktinath temple

இந்நிலையில் தற்போது நேபாளத்தில் அஜித் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கு பிடித்தமான பைக் ரைட்களிலும் அதிகமாக ஈடுபட்டுள்ளார். அவர் அதிகமான ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வருகிறார். இவை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. நேபாளத்திலும் அஜித்திற்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுவதை இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

ஒரு ரசிகர், ஒருபடி மேலே சென்று, தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் அஜித்துடன் தான் இருப்பதாக தான் எடுத்த செல்ஃபி வீடியோவில் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு அஜித், அதிர்ச்சியடைவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற பலதரப்பட்ட ரசிகர்களை அவர் நேபாளத்தில் சந்திக்க நேர்ந்தது. ஒரு குடும்பத்தினர், நடு ரோட்டில் அவரை சந்தித்து மிகுந்த உற்சாகத்துடன் அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Actor Ajithkumar spotted at Nepals Muktinath temple

இந்நிலையில் நேபாளத்தில் முக்திநாத் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடுமையான பனிப்பொழிவிற்கு இடையில் அவர் வெறும்காலில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். வெளியில் வந்து சக மனிதர்களுடன் இயல்பாக பேசிக்கொண்டே தன்னுடைய ஷுவை அவர் அணிந்துக் கொள்வதும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X