Ajith: விடாமுயற்சிக்காக அஜித் செய்த சம்பவம்.. பொங்கல் கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பொங்கலையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங் அசர்பைஜான் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் வரும் 13ம் தேதி துவங்வுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்துடன் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கையும் மேற்கொண்டு வந்த அஜித்குமார், விரைவில் தன்னுடைய ரேஸ் பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த மாதத்திற்குள் இரு படங்களின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டத்தையொட்டி திட்டமிடப்பட்டு வருகிறது.

Ajithkumar Vidaamuyarchi movie Good bad ugly movie

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவரது துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியானது. இதையடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் கொண்டாட்டமாக அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி பட ரிலீஸ்: விடாமுயற்சி படத்தின் பாடல் காட்சி மற்றும் சில பேட்ச் வேலைகள் மீதமுள்ள நிலையில் வரும் 13ம் தேதி பாங்காக்கில் இந்த படத்தின் பாடல் காட்சி படமாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் டப்பிங் வேலைகளை நடிகர் அஜித்குமார் தற்போது துவங்கியுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கிலும் அஜித் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவு பெறவுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கான அடுத்தடுத்த வேலைகளை படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகிற்னர்.

குட் பேட் அக்லி பட சூட்டிங்: படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து சில மாத இடைவெளிகளில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அவரது படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்: இதனிடையே அடுத்ததாக கார் ரேசிங்கில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அவரது ரேஸ் கார் குறித்த விவரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியானது. படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும் தன்னுடைய பேஷனையும் விட்டுக் கொடுக்காமல் அதையும் தொடர்ந்து வருகிறார் அஜித். அவரது இந்த உறுதி மற்றும் உத்வேகம் அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தையும் முயற்சிக்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X