Ajith 64: தனுஷை டீலில் விட்ட இயக்குநர்.. அஜித் பக்கம் திரும்பிய டாப் இயக்குநரின் பார்வை!
சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், டாப் இயக்குநரின் பார்வை அஜித் மீது விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியானத் திரைப்படம் துணிவு. பேங்க் மோசடி குறித்து தெளிவாக பேசப்பட்ட இப்படம் வசூலை அள்ளியது.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இரட்டை வேடத்தில் அஜித்: விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு கதாபாத்திரத்தில் வயதில் மூத்தவராகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் யூத்தாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் எண்ணற்ற இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாலி, வில்லன், வரலாறு, அட்டகாசம், பில்லா 1 போன்ற அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் 63: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதால், அஜித் 63 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நேர்கொண்ட பார்வை படம் வெளியான போதே அஜித்துக்காக ஒரு கதையை கூறி உள்ளார். கதை அஜித்திற்கு பிடித்து விட்டதால், அவரும் ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
அஜித் வெற்றிமாறன் கூட்டணி: மேலும், அஜித்தின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தனுஷை டீலில் விட்ட இயக்குநர்: விடுதலை,வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு தனுஷூடன் இணைந்து வடசென்னை 2 படத்தில் கமிட் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தனுஷை டீலில் விட்டுவிட்டு அஜித் பக்கம் வெற்றிமாறன் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து அஜித்தின் நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அஜித்தின் அடுத்த படம் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











