Ajithkumar: குட் பேட் அக்லி டப்பிங்கை முடிச்சாச்சு.. டைரக்டரோட பிரைவேட் ஜெட்ல அஜித்.. எங்க போறாரு?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்தடுத்த படங்கள் வரும் 2025ம் ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாகவுள்ளது. இதில் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக ரோட் திரில்லர் ஜானரில் இந்தப்படம உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டப்பிங் வேலையையும் அஜித்குமார் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் அஜித் நடித்துள்ள நிலையில் இந்தப் படத்திற்கு மிக அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ajithkumar director adhik ravichandran good bad ugly movie vidaamuyarchi movie

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியாகி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக ஜனவரி 10ம் தேதி அவரது விடாமுயற்சி படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக இந்தப்படத்தின் சூட்டிங் ஏறக்குறைய ஒரு ஆண்டை கடந்து நடந்துள்ள நிலையில், இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் ரோட் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள நிலையில் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி படம்: இந்தப் படத்தின் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அஜித்தை இளமையான க்யூட் லுக்கில் பார்க்க அவர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக இந்தப் படம் பொங்கல் கொண்டாட்டமாகவே வெளியாகவிருந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் அந்த நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ளதால் இந்தப் படம் கோடை கொண்டாட்ட வெளியீடாக மாறியுள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளையும் அஜித் நிறைவுசெய்துள்ளார்.

அஜித் -ஆதிக் பயணம்: இதனிடையே இந்தப் படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்துள்ள அஜித்குமார், படத்தின் இயக்குநரும் தன்னுடைய ஆஸ்தான ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்ததன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆதிக் இருவரும் மிகவும் சுவாரஸ்யமாகவும் அதே நேரத்தில் மிகவும் அதிகமான கவனத்துடனும் எதையோ பேசி செல்வதாக காணப்படுகிறது. இதன்போது கோட் ஷுட்டுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் காணப்படுகிறது. தற்போது ஸ்லிம்மாகியுள்ள அவரது லுக் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.

ஆதிக் எமோஷனல் பதிவு: முன்னதாக அஜித் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் எமோஷனலாக பதிவிட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் அஜித்தின் குரலை தியேட்டரில் கேட்க தான் காத்திருப்பேன் என்று கூறியுள்ள அவர், தற்போது அவரது குரலை டப்பிங்கின்போது கேட்டது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கடவுள், பிரபஞ்சம் மற்றும் அஜித்தின் அனுமதியுடன் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு துவங்கியதும் முடிவடைவதும் குட் பேட் அக்லி என்ற அழகான திரையனுபவத்துடன்தான் என்றும் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X