இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்… என்ன கிஃப்ட் கொடுத்தார் தெரியுமா?

சென்னை : வலிமை திரைப்படம் வெளியாக 3 தினங்களே இருக்கும் நிலையில், நடிகர் அஜித் குமார் இயக்குநர் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இதற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்து வருகிறார் போனிகபூர்.

வலிமை

வலிமை

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப சென்டிமென்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

பிப்ரவரி ரிலீஸ்

பிப்ரவரி ரிலீஸ்

யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து படம் பிப்ரவரி 24ந் தேதி வெளியாக உள்ளது.

Recommended Video

Ajith Sir இதை சொல்லும்போது வெக்கமா வரும் !Valimai Villain First Exclusive Tamil Interview
பல திரையரங்குகளில்

பல திரையரங்குகளில்

தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேநேரம் ஆந்திரா, தெலுங்கானாவில் 750 திரையரங்குகளுக்கு மேல் வலிமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வலிமை படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்

சர்ப்ரைஸ் விசிட்

சர்ப்ரைஸ் விசிட்

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமை படத்தை அஜித்குமார் தனது குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் எச்.வினோத்தின் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த அஜித், வினோத்தின் மகனுக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X