AK: அச்சச்சோ என்னாச்சு.. அப்பல்லோவில் அஜித்குமார் அட்மிட்.. நாளைக்கு பிறந்த நாள்.. என்ன நடக்குது?

சென்னை: நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவிலும் இந்திய மற்றும் உலக அளவிலான கார் ரேஸிலும் மிகவும் முக்கியமான நபராக உள்ளார். நேற்று முன் தினம் டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷன் விருது பெற்று நேற்று சென்னை திரும்பினார் அஜித்குமார். இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மொத்த திரைத் துறையினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Actor Ajithkumar Was admitted in Chennai Apollo Hospital fans Getting Shock

மேலும், அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம், அவரது வழக்கமான உடல் பரிசோதனைக்காகத்தான் என கூறப்படுகிறது. நாளை தனது 54வது பிறந்த நாளை அஜித் குமார் கொண்டாவுள்ள நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடை பெற்று வரும் கார் ரேஸ்க்காக கடந்த ஆண்டில் இருந்தே கடுமையாக உழைத்து வருகிறார். குறிப்பாக அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அடுத்தடுத்து ராப்பகலாக நடித்துக் கொடுத்தார். இது மட்டும் இல்லாமல், ஒரு புறம், கார் ரேஸ்க்காக தனது பெயரில் தொடங்கப்பட்ட அணியை மிகவும் வலுவாக கட்டமைப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். அஜித் குமார் தனது இரண்டு படங்களின் வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு, ஒட்டுமொத்த கவனத்தையும் கார் ரேஸில் செலுத்த வேண்டும் என முடிவெடுத்து படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் உடல் எடையைக் குறைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி, உடல் எடையைக் குறைத்தார்.

கார் ரேஸ்: அஜித் குமார் ரேஸிங் அணியின் உரிமையாளராக மட்டும் இல்லாமல் அஜித் குமார் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்து வழிநடத்தி வருகிறார். இதுவரை இவரது ரேஸிங் அணி இரண்டு முறை மூன்றாம் இடமும் ( துபாய் மற்றும் இத்தாலி) ஒருமுறை இரண்டாவது இடமும் (பெல்ஜியம்) பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் மொத்த இந்தியாவுக்குமே பெருமை சேர்த்து வருகிறார். இதற்காக நாடு நாடாக பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.

Actor Ajithkumar Was admitted in Chennai Apollo Hospital fans Getting Shock

அலைச்சல்: இதற்கு மத்தியில் அஜித் குமார் தனது 25வது திருமண நாளைக் கொண்டாட இந்தியா வந்தார். மேலும், அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதைப் பெறவும் இந்தியாவுக்கு வந்தார். திருமண நாளைக் கொண்டாடி முடித்த பின்னர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற, சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்க்க வந்திருந்தார். அதன் பின்னர் விருது வாங்க குடும்பத்துடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பினார் அஜித் குமார்.

காரணம்: தொடர்ந்து நாடு நாடாக சுற்றி வருகிறார் அஜித். இதில் அவருக்கான ஓய்வு நேரம் என்பது எந்த அளவுக்கு உள்ளது, அதில் அவர் எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்கிறார் என்ற கேள்வியை, அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இது வழக்கமான பரிசோதனைக்காகத்தான் என கூறப்பட்டாலும், நாளை அஜித்குமார் தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாவுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X