மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்.. போர்ச்சுக்கல் கார் ரேஸ் பயிற்சியில் விபத்து..ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: நடிகர் அஜித் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் ஷூட்டிங் மற்றும் டப்பிங்கை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய கார் ரேசிங்கிற்காக துபாய் சென்றிருந்தார். அங்கு அவரது அணி கார் ரேசிங்கில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக போர்ச்சுக்கல்லில் கார் ரேசிங்கில் பங்கேற்பதற்காக அஜித் சென்றுள்ளார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட அஜித்திற்கு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயங்கள் ஏற்படாத நிலையில், தற்போது போர்ச்சுக்கல்லில் பயிற்சியில் அவர் ஈடுபட்ட நிலையில் அவரது கார் மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ajithkumar portugal

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்த போதிலும் படத்தின் வசூல் கடந்த மூன்று தினங்களில் சிறப்பாக அமைந்து வருகிறது. அஜித் -மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை குறிப்பாக அஜித் ரசிகர்களை கவர தவறியுள்ளது. சிறப்பான திரைக்கதையுடன் இந்த படத்தை அணுகியுள்ளார் மகிழ் திருமேனி. ஆயினும் அஜித் ரசிகர்களை அவர் கவனத்தில் கொண்டு செயல்பட்டிருந்தால் படம் மாஸ் காட்டி இருந்திருக்கலாம்.

விடாமுயற்சி படம்: படத்தில் வில்லன்கள் அனைவரும் அஜித்தின் நெஞ்சில் ஏறி ஏறி மிதிக்கிறார்கள். இதனிடையே திரிஷாவும் 12 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கையில் வேறு ஒருவரை தேடி போவதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அஜித்தை கடவுள் ரேஞ்சுக்கு அவரது ரசிகர்கள் பார்த்துவரும் நிலையில் இந்த விஷயங்களை அஜித் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு ரசிகர் எக்ஸ்ட்ரீம் லெவலில் மூன்று பைத்தியங்கள் இந்த படத்தில் இருப்பதாக காட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இரண்டு பைத்தியங்கள் அர்ஜுன் மற்றும் ரெஜினா என்றும் மூன்றாவது பைத்தியம் காசு கொடுத்து இந்த படத்தை பார்க்க வந்த தான்தான் என்றும் அவர் கூறியதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

கார் ரேஸிங்கில் பிசியான அஜித்: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய கார் ரேசிங் போட்டிகளுக்காக அஜித் வெளிநாட்டில் பயணம் செய்து வருகிறார். கடந்த மாதத்தில் துபாயில் நடந்த ரேஸிங்கில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. முன்னதாக இந்த போட்டிக்காக அஜித் பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அவரது கார் விபத்துக்கு உள்ளானது. ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அஜித் நம்பிக்கையுடன் வெளிவந்ததையும் தொடர்ந்து அவரது அணியை இந்த போட்டியில் ஈடுபட செய்த வெற்றி பெற வைத்ததையும் பார்க்க முடிந்தது.

மீண்டும் விபத்தை சந்தித்த அஜித்: அஜித் என்றாலே தன்னம்பிக்கை தான் என்பதை அவர் ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வரையில் அவர் பயிற்சி மேற்கொண்ட கார் மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது. போர்ச்சுகளில் நடக்கவுள்ள அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக அஜித் கார் பயிற்சியை மேற்கொண்ட நிலையில் அவரது கார் மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது. அடுத்தடுத்து இவ்வாறு நிகழும் சம்பவங்கள் அஜித் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது. அதிர்ஷ்டவசமாக அஜித்திற்கு இந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதே ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X