Good bad ugly movie: மாமே.. அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீசும் அறிவிச்சாச்சு.. வெடிய போட்டுடலாமா?

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் குறித்து அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் இம்மாதம் 23ம் தேதி குடியரசு தின சிறப்பு ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டு சூட்டிங்கில் இறங்கிய குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் விடாமுயற்சி படத்தின் ரிலீசையொட்டி தள்ளிப் போனது. கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக இந்தப் படம் குறித்து கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ajithkumar good bad ugly tamil new year

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் கவனம் ஈர்த்துவரும் நிலையில் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் கொண்டாட்டமாக அவரது துணிவு படம் வெளியான நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்தே அவரது அடுத்தப்படம் ரிலீசாகவுள்ளது. இரண்டு ஆண்டுகள் தன்னுடைய ரசிகர்களை காத்திருக்க வைத்தாலும் அதிரடியாக அடுத்தடுத்த படங்களை கொடுக்கவுள்ளார் அஜித். அவரது விடாமுயற்சி படம் வரும் 23ம் தேதி குடியரசு தின ஸ்பெஷலாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கல் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

குட் பேட் அக்லி பட ரிலீஸ்: இந்நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இந்தப் படம் பொங்கல் கொண்டாட்டமாகவே வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீசையொட்டி இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: இதுகுறித்து சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்புடன் அஜித்தின் கிளாஸான போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரும் இந்த அறிவிப்பை உற்சாகத்துடன் பதிவு செய்துள்ளனர். அஜித்தின் அடுததடுத்த படங்கள் இரண்டு மாத இடைவெளிகளிலேயே வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வைபை உருவாக்கியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.

ரசிகர்கள் உற்சாகம்: இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமில்லாமல் ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டப்பிங் வேலைகளையும் முடித்த அஜித்குமார், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தனி விமானத்தில் பயணித்த வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் ரஷ்ஷை பார்த்த அஜித், மிகவும் உற்சாகமடைந்துள்ளதாகவும் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அவர் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X