தள்ளிப் போகிறதா அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ்.. ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம்!
துபாய்: நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீசாகி 2 ஆண்டுகளை கடந்த நிலையில் அவரது அடுத்தப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விடாமுயற்சி படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் அதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அஜித்தின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் முன்னதாக பொங்கல் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதத்தால் இந்தப் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போனது. ஆனால் இந்தப் படத்தின் ரிலீசில் மாற்றம் இருக்கலாம் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசானது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் அஜித்துடன் இணைந்து லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு துணிவு படத்தின் திரைக்கதையை வடிவமைத்திருந்தார் இயக்குநர் ஹெச் வினோத். படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் படத்தின் பல்வேறு பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனநிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: கடந்த பொங்கலையொட்டியே விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. முன்னதாக பொங்கல் ரேஸில் பங்கேற்கவிருந்த அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லி படத்தின் ரிலீசும் விடாமுயற்சி படத்தால் தள்ளிப் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரு படங்களுமே பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக குட் பேட் அக்லி படம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அஜித்தின் படம் தாமதமானாலும் அடுத்தடுத்து இரு மாத இடைவெளிகளில் அடுத்தடுத்து ரிலீசாவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தின.
தள்ளிப் போகிறதா குட் பேட் அக்லி ரிலீஸ்?: இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேன் பாய் சம்பவமாக உருவாகியுள்ளது குட் பேட் அக்லி படம். இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் அஜித் நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் மட்டுமில்லாமல் ஸ்பெயினிலும் அதிக நாட்கள் நடத்தப்பட்டன. இந்தப் படத்தின் சூட்டிங்கையும் டப்பிங் வேலைகளையும் அஜித் முடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
எப்போது ரிலீஸ்?: இதனிடையே திட்டமிட்டபடி படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வைபை ரசிகர்களிடையே கொடுத்துள்ள நிலையில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ரிலீசாகவிருந்த படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்திக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளது-


Click it and Unblock the Notifications











