Ajithkumar: ஒரே நேரத்துல ரெண்டா.. அஜித்தோட குட் பேட் அக்லி படத்துல டைரக்டர் செய்துவரும் சம்பவம்!
சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் என அடுத்தடுத்த கட்ட சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் தற்போது ஸ்பெயினில் உள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங்கை ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் அடுத்தடுத்த படங்களால் தன்னுடைய ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார். இருந்தபோதிலும் ஏறக்குறைய அவரது துணிவு படம் ரிலீசாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இன்னும் அஜித்தின் அடுத்தப்படம் ரிலீசாகாமல் உள்ளது. இது அவரது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால் அவர்களை உற்சாகப்படுததும் வகையில் அடுத்தடுத்த அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகவுள்ளதால் அவர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்தப் படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில், படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படத்தில் மகிழ் திருமேனி, அஜித்தை எப்படி காட்டியுள்ளார் என்பதை அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
குட் பேட் அக்லி படம்: இதனிடையே அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்து நடித்து வருகிறார் அஜித்குமார். இந்தப் படத்தில் அவருக்கு மூன்று வித்தியாசமான கெட்டப்புகள் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களில் இதை பார்க்க முடிகிறது. படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்பெயினில் உள்ளனர். முன்னதாக படத்தின் சூட்டிங் ஜப்பானில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விடாமுயற்சி போன்ற அனுபவத்தை தவிர்க்க, ஸ்பெயினிற்கு சூட்டிங் ஸ்பாட் மாற்றப்பட்டது.
ஒரே நேரத்தில் இரண்டு: இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பெயினில் மட்டுமில்லாமல் பல்கேரியாவிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து டிசம்பர் மாதம் வரையில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் அல்லது மே மாதத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு அஜித்துடையது என்று இப்போதே அவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











