குட் பேட் அக்லி பட முதல் கட்ட சூட்டிங் இன்று நிறைவு.. அஜித்தோட விடாமுயற்சி பிளான் என்ன தெரியுமா?

ஐதராபாத்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சூழலில் அஜித்தின் மாஸான இன்ட்ரோ பாடலுக்கான ஷூட்டிங் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கான சூட்டிங்கை இன்றுடன் நிறைவு செய்யும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒட்டுமொத்தமாக ஹைதராபாத் ஷெட்யூலையும் இன்றுடன் பேக்கப் செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஜப்பான் செல்லவுள்ளனர். இந்நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே நடக்கவுள்ள சூழலில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Ajithkumar Good bad ugly movie Vidaamuyarchi movie Hyderabad tamil cinema

நடிகர் அஜித்: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடலுக்கான ஷூட்டிங்கை துவங்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இதனிடையே, இன்றைய தினம் இந்த சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்றுடன் ஐதராபாத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

விடாமுயற்சி சூட்டிங்: இதனிடையே வரும் ஜூன் மாதம் 20ம் தேதி அடுத்த கட்டமாக அசர்பைஜானில் நடக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் மகிழ் திருமேனி தெரிவித்திருந்த சூழலில் வரும் 20ம் தேதி துவங்க உள்ள இந்த ஷூட்டிங் தொடர்ந்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் இது கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான ஷூட்டிங் எனவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் செல்லும் அஜித்: இந்த படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜப்பான் செல்லவுள்ளார் அஜித். இந்த படமும் விரைவில் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ள சூழலில் முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது. சில விமர்சனங்களையும் பெற்றது.

சரியான திட்டமிடலில் ஆதிக்: இந்தப் படத்தில் அஜித்துடன் இணையவுள்ள ஹீரோயின் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அஜித்துடன் பிரபல மலையாள இளம் நடிகர் நஸ்லன் இணையவுள்ளதாகவும் அவர் அஜித்திற்கு மகனாக நடிக்க உள்ளதாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே சரியான திட்டமிடலுடன் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை மேற்கொண்டு வருகிறார் ஆதித் ரவிச்சந்திரன். ஹைதராபாத்தில் சில தினங்கள் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பிலேயே படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் மாசான இன்ட்ரோ பாடல் என அடுத்தடுத்து ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் ஆதிக்.

ரசிகர்கள் உற்சாகம்: இதே போல அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்கையும் அவர் சிறப்பாக திட்டமிட்டு படத்தை படத்தை விரைவிலேயே முடித்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருவது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி அவரது துணிவு படம் ரிலீசானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அஜித் அடுத்ததாக இயக்குநர்கள் ஷங்கர் அல்லது ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்திற்கான காரணமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X