Actor Ajith: அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடல்.. 250க்கும் மேற்பட்ட டான்சர்ஸ் ஆட போறாங்களாம்!

ஐதராபாத்: நடிகர் அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அதன் பின்பு ஜூன் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதால் மே மாதத்திலேயே குட் பேட் அக்லி பட சூட்டிங்கில் அஜித் இணைந்திருந்தார்.

இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஹைதராபாத்தின் சாரதி மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோக்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. சில காட்சிகளுக்கு ரிகர்சல் எடுக்கப்பட்டு பின்பு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் அஜித் மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கவுள்ள சூழலில் முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Ajithkumar Good bad ugly movie Adhik Ravichandran Hyderabad tamil cinema

நடிகர் அஜித்: நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த ஷெட்யூல் களாக தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கிய சூழலில் இரு தினங்களிலேயே உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நிறைவடைந்த உடன் சில தினங்களில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் துவங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது சில தினங்கள் ஷூட்டிங்கில் இடைவெளி விட்டுள்ள படக்குழுவினர் மீண்டும் வரும் ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த கட்ட சூட்டிங்கை துவங்க உள்ளனர்.

குட் பேட் அக்லி பட சூட்டிங்: ஐதராபாத்தின் சாரதி மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோக்களில் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகின்றன. அஜித் படங்கள் எப்போதும் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில்தான் அதிகப்படியாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது இந்த ஸ்டூடியோக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்த செட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை சென்று சந்தித்தார் நடிகர் அஜித். அப்போது மிகவும் எளிமையான முறையில் அஜித் சிறப்பான லுக்குடன் காணப்பட்டார். இதையடுத்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

மாஸ் இன்ட்ரோ பாடல்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தில் மூன்று கேரக்டர்களில் நடித்து வருகிறார் அஜித். இதில் ஒரு கேரக்டரில் அட்டகாசம் படத்தின் அஜித் கேரக்டர் பிரதிபலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது அஜித்தின் நெகட்டிவ் கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி ஐதராபாத்தில் மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், அஜித்தின் மாசான இன்ட்ரோ சாங்கை படக்குழுவினர் சூட் செய்யவுள்ளனர். இதையொட்டி 250க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான அளவில் இந்த பாடலுக்கான ரிகர்சல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டுப்புற பாணியில் இன்ட்ரோ பாடல்: இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை ரிகர்சல் செய்தபின்பே இயக்குநர் படமாக்கி வருகிறார். முன்னதாக படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றுக்காகவும் அஜித் ரிகர்சலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஃபோக் சாங் பாணியில் இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இணையவுள்ள நடிகர்கள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X